ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த அமேசான்! நீங்கள் வேறு பணியில் சேர்ந்து கொள்ளலாம்!
உலகின் நம்பர் ஒன் பணக்கரார்களில் ஒருவரான எலான் மஸ்க் அண்மையில் தான் ட்விட்டர் நிறுவனத்தை 44பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார்.அதன்பிறகு அவர் அதிரடியாக பல முடிவுகளை எடுத்தார் அதில் ஒன்று ட்விட்டர் நிறுவனத்தில் பணியாற்றி வந்த 7,500 ஊழியர்களில் சுமார் 4 ஊழியர்களை அதிரடியாக பணியில் இருந்து நீக்கினார்.
ட்விட்டரை அடுத்து சமூக வலைதளங்களில் புகழ்பெற்ற ஒன்றாக இருக்கும் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா அதிக அளவில் ஆள்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.அந்த நடவடிக்கையில் சுமார் 11ஆயிரம் ஊழியர்களை மெட்டா பணியில் இருந்து நீக்கியது.இவை அந்த நிறுவனத்தில் பணிப்புரியும் ஊழியர்களில் 13 சதவீதம் ஆகும்.
இந்நிலையில் உலகில் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் அமேசான் நிறுவனமும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதாக அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் கூறியுள்ளது.அதில் ட்விட்டர் மற்றும் பேஸ்புக்கை அடுத்து தற்போது அமேசான் நிறுவனமும் ஆள்குறைப்பு செய்ய தயாராகி வருகின்றது.
அந்த நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்களின் மொத்தம் மூன்று சதவீதமாகும்.இதுவரை இல்லாத அளவில் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்த முடிவு செலவினங்களை குறைப்பதற்கு எடுக்கப்படுவதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளது.இந்நிலையில் ஆள்குறைப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.
அந்த நடவடிக்கையின் மூலம் அமேசான் நிறுவனத்தில் ஒரு சில பணியிடங்கள் தேவையில்ல என முடிவு செய்யப்பட்டுள்ளது.அந்த குறிப்பிட்ட பணியில் இருக்கும் பணியாளர்கள் நிறுவனத்திற்குள்ளேயே வேறு துறையில் காலி பணியிடங்கள் இருந்தால் இடம் மாறிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.