முட்டாள்தனமாக முடிவெடுத்த அமேசான் நிறுவனம்!!ரூ.4 கோடிநஷ்டம்.. புலம்பும் உற்பத்தியாளர்கள்!!

0
7
Amazon made a stupid decision!! Rs. 4 crore loss.. Manufacturers are complaining!!
Amazon made a stupid decision!! Rs. 4 crore loss.. Manufacturers are complaining!!

அமேசான் நிறுவனமானது மிகப்பெரிய முட்டாள்தனமான முடிவை தற்பொழுது எடுத்து இருக்கிறது. இதனால் பல உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதோடு அமேசான் நிறுவனத்தின் பங்குகளும் வீழ்ச்சியை சந்திக்கும் என்பதை அமேசான் நிறுவனத்தினர் யோசித்தார்களா என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அமேசான் நிறுவனம் 4 கோடி ரூபாய்க்கு பொருட்கள் ஆர்டர் செய்துவிட்டு திடீரென அவற்றை தவறுதலாக ஆர்டர் செய்து விட்டதாக கூறி ஆர்டரை கேன்சல் செய்து இருப்பது உற்பத்தியாளர்களை மிகப்பெரிய அளவில் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. அமேசான் நிறுவனத்தின் இந்த முடிவானது அதிபர் ட்ரம்ப் அவர்களின் சுங்க வரியால் நிகழ்ந்திருக்கலாம் என கூறப்பட்டாலும் உற்பத்தியாளர்களிடம் இதுபோன்று ஆர்டர் கொடுத்துவிட்டு அந்த ஆர்டர் தயார் நிலையில் இருக்கும்பொழுது அதனை வேண்டாம் என கூறுவது முறையான விஷயம் அல்ல.

பீச் ஷேர் கடந்த 10 ஆண்டுகளாக அமேசான் நிறுவனத்திற்கு உற்பத்தி செய்து கொடுத்து கொண்டிருக்க கூடிய தொழிலாளர் இது குறித்து கூறும் பொழுது, இத்தனை ஆண்டுகளாக தங்களிடம் பீச் ஷேர் வாங்கிக் கொண்டிருந்த அமேசான் நிறுவனம் தற்பொழுது அதனை தவறுதலாக வைத்த ஆர்டர் எனக் குறிப்பிட்டு இருப்பது தங்களுக்கு மிகப்பெரிய நஷ்டத்தை உருவாக்கியிருப்பதாகவும் தொழிற்சாலைகளுக்கு உடனடியாக பணம் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் தாங்கள் சிக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Previous articleநீட் தேர்வு வேண்டும்!!உயிரிழந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி.. எடப்பாடி பழனிச்சாமியின் திடீர் அறிவிப்பு!!
Next articleகூட்டுறவு துறையில் 3,353 காலி பணியிடங்கள்!! அமைச்சர் பெரியகருப்பன் அறிவிப்பு!!