நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைக்கும் அம்பாசமுத்திரம் அம்பானி கருணாஸ்!

0
163
Ambasamudram Ambani Karunas to make his debut as a hero in cinema after a long hiatus!
Ambasamudram Ambani Karunas to make his debut as a hero in cinema after a long hiatus!

நீண்ட நாட்களுக்குப் பிறகு சினிமாவில் கதாநாயகனாக காலடி எடுத்து வைக்கும் அம்பாசமுத்திரம் அம்பானி கருணாஸ்!

தமிழ் சினிமா நடிகர் கருணாஸ் மீண்டும் சினிமாவில் அடி எடுத்து வைத்திருக்கிறார்,அதுவும் கதாநாயகனாக! வெகு நாட்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார். அவர் இதுவரை பல படங்களில் நடித்திருக்கிறார்,அவர் நடித்த படங்களில் மிகவும் புகழ்பெற்றது “அம்பாசமுத்திரம் அம்பானி” என்ற திரைப்படம்தான் இத்திரைப்படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் அவரை “அம்பாசமுத்திரம் அம்பானி” என்றே  தான் அழைத்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல் திண்டுக்கல்,சாரதி,ரகளபுரம் திருநாள் போன்ற பல படங்களிலும் நடித்திருக்கிறார். “திருநாள்” படத்தை இயக்கிய இயக்குனர் பி.எஸ் ராம்நாத் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் தான் “ஆதார்” இதில் நடிகர் கருணாஸ் கதையின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் நடிகை ரித்விகா நடிக்கிறார், இவர்களுடன் நடிகர் அருண்பாண்டியன் ‘வத்திக்குச்சி’ படக்குழு திலீப் மற்றும் ‘பாகுபலி’ படம் புகழ் பிரபாகர் நடிகை மனிஷா யாதவ் உள்ளிட்ட பல நடிகர் நடிகைகள் நடிக்கிறார்கள்.

நாராயணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு ஸ்ரீ_காந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். சூப்பர் சுப்பராயன் சண்டைப் பயிற்சிகளைக் கவனிக்க படத்தொகுப்பை ஜெய் மேற்கொண்டிருக்கிறார். கலை இயக்குனர் பொறுப்பை ஜான் பிரிட்டோ ஏற்றிருக்கிறார், இந்தப் படத்தின் நிர்வாக தயாரிப்பாளராக ஏ.பி ரவி பணியாற்றியிருக்கிறார். “ஆதார்” என்ற திரைப்படத்தை வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அழகம்மை மகன் சசிகுமார் தயாரித்து இருக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு இன்று(16.07.2021) முதல் தொடங்கியிருக்கிறது. அதனால் சென்னையில் மொத்த படக்குழுவினரும் இப்படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்குகின்றன.

Previous articleவெளிநாடு செல்லும் வழியில் நடிகைக்கு நேர்ந்த அசம்பாவிதம்!! சோகத்தில் குடும்பத்தினர்!!
Next articleவாகனங்களுக்கு முன்பு எலுமிச்சை பழம் மற்றும் மிளகாய் கட்டுவது எதற்காக?! இதுதான் காரணமா!!