அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

0
279
#image_title

அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல் பிடுங்கிய விவகாரம்! சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை

அம்பாசமுத்திரம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களில் மார்ச் 10, 11, 12 ஆகிய தேதிகளில் சிசிடிவி கேமரா காட்சிகள் இல்லை.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பதிவாகவில்லை என காவல்துறை தரப்பில் விளக்கம்.

சிசிடிவி கேமராக்களில் காட்சிகள் பதிவாகவில்லை என்றால் அது குறித்து மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அது போன்று தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

மார்ச் 10ஆம் தேதி தான் மாயாண்டி மட்டன் ஸ்டால் சகோதரர்களான செல்லப்பா, இசக்கிமுத்து, மாரியப்பன், சுபாஷ், அருண்குமார் உள்ளிட்ட 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அன்றுதான் பற்கள் பிடுங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் குறிப்பிட்ட அந்த நாட்களில் மட்டும் திட்டமிட்டு சிசிடிவி காட்சிகள் அழிக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.

இதனையடுத்து கல்லிடைக்குறிச்சி வி கே புரம் காவல் நிலையங்களில் சிசிடிவி காட்சிகள் விசாரணை அதிகாரி சார ஆட்சியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Previous articleபோலி வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனீஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு
Next articleசிறுவன் நீச்சல் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம்! நீச்சல் குளத்தை மூடி சென்னை மாநகராட்சி உத்தரவு