அம்பேத்கர் விருது பெற்ற மூத்த அரசியல் தலைவர் மருத்துவமனையில் அனுமதி!

Photo of author

By Parthipan K

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதி.

சென்னை நந்தனம் பகுதியில் வீட்டுவசதி வாரியம் குடியிருப்பில் வசித்து வருகிறார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு (வயது 94). தமிழக அரசியல் தலைவர்களில் மிகவும் எளிமையான ஒரு தலைவர் என்றால் அது இவர் தான்.

இவருடைய 80 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கட்சி சார்பில் ஒரு கோடி ரூபாய் வசூலித்து கொடுத்தது. அதை அந்த மேடையில் வைத்து கட்சிக்கே திருப்பிக் கொடுத்துவிட்டார். தமிழக அரசு அம்பேத்கர் விருது கொடுத்து ஒரு லட்சம் ரூபாயை வழங்கியது. அதில் பாதியைக் கட்சிக்கும் மீதியை விவசாயத் தொழிலாளர் சங்கத்துக்கும் கொடுத்துவிட்டார்.

இந்நிலையில் தற்போது இவருக்கு சாதாரண காய்ச்சல் அறிகுறிகள் ஏற்பட்டதால் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும், இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சி.மகேந்திரன், சாதாரணக் காய்ச்சல் தான் என்றும், யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார்.