பல மணி நேரமாக நீடித்த துப்பாக்கிச்சண்டை

0
63

தலீபான் பயங்கரவாதிகளுக்கும், ஆப்கானிஸ்தான் அரசுக்கும் 19 ஆண்டுகளுக்கு போர் நடந்து வருகிறது. அந்த நாட்டு ராணுவம் தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க  போராடி வருகிறது. தலீபான் பயங்கரவாதிகளின்  ஆதிக்கம் மிகுந்த பல மாகாணங்களில் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அரசுக்கு ஆதரவாக தலீபான் பயங்கரவாதிகளின் சண்டையிட்டு வருகின்றனர்.  ஆப்கானிஸ்தானின் வடகிழக்கு பகுதியில் உள்ளது தாக்கர் மாகாணம். அந்த இடத்தில் உள்ள லால குஷார் என்ற  பகுதியை அரசு சார்பு போராளிகளை குறி வைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர்.

இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரமாக கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது. இந்த மோதலில் தலீபான் பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை.

author avatar
Parthipan K