ஜெட் வேகத்தில் பறந்த ஆம்புலன்ஸ்! அதில் இருந்த லட்சாதிபதி யார்?
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள தோப்புத்துறையில் போலீசார் வாகன சோதனை நடத்திவந்தனர்.இவர்கள் வாகன சோதனை நடத்திக் கொண்டிருக்கும் போது ஜெட் வேகத்தில் ஒரு ஆம்புலன்ஸ் இவர்களை கடந்து சென்றது.இதனை பார்த்த போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.இதனையடுத்து சினிமா பாணியில் விரைந்து சென்ற போலீசார் அந்த ஆம்புலன்ஸை மடக்கி பிடித்தது.
போலீசார் அந்த ஆம்புலன்சை சோதித்த போது அதில் 28 கிலோ மதிப்புள்ள பதபடுத்தப்பட்ட கஞ்சா இலங்கைக்கு கடத்தப்படுவது தெரியவந்தது.மேற்கொண்டு விசாரித்த போலீசார் சென்னையில் உள்ள அயனாவரம் மற்றும் வில்லிவாக்கத்தை சேர்ந்த ராஜ்குமார்,மகேந்திரன்,விக்னேஷ்,சுந்தர் ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூபாய் 50 லட்சம் என விசாரனையில் தெரிய வந்தது.இதற்கடுத்து இந்த கஞ்சாவை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த கஞ்சா வேதாரண்யமிலிருந்து சென்னைக்கு கடத்தப்பட்டு படுகு மூலம் இலங்கைக்கு கடத்தப்படுகிறது என்பது தெரிய வந்தது.தொடர்ந்து கஞ்சா கடத்தும் நிலை அதிகமாகி வருவதால் போலீசார் தக்க நடவடிக்கை எடுத்து இதை நிறுத்த வேண்டும்.மேலும் இதுக்குறித்து விசாரணை போலீசார் நடத்தி வருகின்றனர்.