ஆம்புலன்ஸ்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும்! தேனி பெரியகுளம்  மக்களின் வலியுறுத்தல்!

Photo of author

By Rupa

ஆம்புலன்ஸ்கென்று தனி இடம் ஒதுக்க வேண்டும்! தேனி பெரியகுளம்  மக்களின் வலியுறுத்தல்!

தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் பல்வேறு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பால் அடைந்த சின்னதாஸ் பூங்காவை புதிதாக அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து பூங்காவை சுற்றிலும் உள்ள ஆக்கிரம்புகள் அகற்றப்பட்டது.இது குறித்து பெரியகுளம் பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் -பழைய பேருந்து நிலையத்தில் உள்ள சின்னராசு பூங்காவைசுற்றி கடைகள் உள்ளிட்ட பல்வேறு ஆக்கிரமத்துகள் அகற்றப்பட்டு வருகிறது.

ஆக்கிரம்புகள் அகற்றிய பின்பு முழுமையாக நகராட்சி சொந்தமான பகுதிகளை வராமத்துப் பணிகள் செய்ய வேண்டும்.பழைய பேருந்து நிலைய பகுதியில் சென்னை செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து நின்று செல்லு வகையில் பேருந்து நிறுத்தம் ஏற்படுத்த வேண்டும் எனவும்,காவல் நிலையத்தில் உள்ள ஆம்புலன்ஸ் வாகனம் அவசர காலங்களில் செல்லும்போது இருசக்கர வாகனங்களை நிறுத்தி பல்வேறு விதமான இடையூறுகளை ஏற்படுத்துகிறது.

ஆகவே ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு என்று தனியாக இடம் ஒதுக்கி நிழற்குடை அமைத்து தர வேண்டும் எனவும்,அன்றாட தேவைகளுக்கு காவல் நிலையம் வங்கி உள்ளிட்ட பகுதிகளுக்கு வரும் பொதுமக்கள் இருசக்கர வாகனம் நிறுத்தும் வகையில் இடம் ஒதுக்கி தரவேண்டும் எனவும்,மராமத்துப் பணி செய்த பின்பு நகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்பில் ஈடுபடும் ஆக்கிரமிப்பாளர்கள் மீது நகராட்சி நிர்வாகமும் காவல்துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.