ஆப்கானிஸ்தான் காபூல் விமான நிலைய இரட்டைக் குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பழிவாங்கும் விதமாக ஆப்கானிஸ்தானில் அரசால் பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தி இருக்கின்றது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி இருக்கின்ற சூழ்நிலையில், அந்த பகுதியில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவி வருகிறது எதிர்வரும் 31ஆம் தேதிக்குள் அனைத்து அமெரிக்க படைகள் வெளியேற இருக்கின்றன. இந்தியா உட்பட அனைத்து நாடுகளும் தங்களுடைய மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்கும் பணிகளில் மிக தீவிரமாக இறங்கி வருகிறார்கள். சொந்த நாட்டை விட்டு விட்டு வெளியேற நினைத்த ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி இருக்கின்றன நேச நாடுகள்.
இந்த மீட்பு பணிகள் அனைத்தும் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்து வருகின்ற சூழலில் தங்களுடைய படைகளை மீட்டுக் கொண்டு போகும் வரையில் அமெரிக்கப் படைகள் காபூல் விமான நிலையத்தை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறார்கள். இந்த சூழலை பயன்படுத்தி ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் நேற்று முன்தினம் ஒரு குண்டுவெடிப்பை நிகழ்த்தியது அந்த பயங்கரவாத அமைப்பு சார்பாக நடந்த தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட சுமார் 150க்கும் அதிகமானோர் பலியானார்கள் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 175 ஆக அதிகரித்திருக்கிறது.
மீட்புப் பணியின் போது எதிர்பாராதவிதமாக நடந்த இந்த திடீர் தாக்குதல் அமெரிக்காவை கோபம் வர செய்து உள்ளது இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்றைய தினம் அறிவித்திருந்தார். அதனடிப்படையில் அமெரிக்கா தற்சமயம் தன்னுடைய ஆட்டத்தை தொடங்கியிருக்கிறது ட்ரோன்கள் மூலமாக ஐஎஸ் பயங்கரவாதிகள் குறிவைத்து அமெரிக்க இராணுவம் தாக்குதலை தொடங்கியிருக்கிறது. இதனால் காபூல் விமான நிலைய நுழைவு வாயில் பகுதியில் இருக்கும் தங்களுடைய நாட்டு மக்களை உடனடியாக வெளியேற வேண்டும் என்று அமெரிக்க அரசு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. இதன் காரணமாக அந்த பிராந்தியத்தில் பதற்றம் நிலவி வருகிறது.