கோடநாடு சம்பவம்! மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது எப்படி வெளியானது மர்மம்!

0
66

கொடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 5 பேர் பலியாகி இருப்பதால் கொடநாடு வழக்கில் மறுவிசாரணை கடுமையான எதிர்ப்பு இருந்தாலும் இத்தனை உயிரிழப்புகள் இருப்பதால் அந்த வழக்கின் முக்கியத்துவம் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு மறு விசாரணைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கி இருக்கிறது. இந்த வழக்கின் மறு விசாரணையில் முக்கிய குற்றவாளியான சயானிடம் 3 மணி நேரம் ரகசிய வாக்குமூலம் வாங்கி இருக்கிறது. காவல்துறை. கனகராஜ் அண்ணன் தனபாலிடம் ஒரு மணி நேரமாக வாக்குமூலம் வாங்கி இருக்கிறார்கள் இவர்கள் இரண்டு பேரிடமும் வாங்கிய வாக்குமூலத்தை 60 பக்க அறிக்கையாக தயார் செய்து இருக்கின்றார்கள். காவல் துறையை சார்ந்தவர்கள் இருந்தாலும் அது இன்னமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.. இந்த சூழ்நிலையில், கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் அந்த சம்பவத்தின்போது சிசிடிவி கேமரா, மின் இணைப்புகள், உள்ளிட்டவை துண்டிக்கப்பட்டது எப்படி? நிகழ்ந்தது என்று தற்சமயம் தெரியவருகிறது.

சம்பவம் நடந்த போது முதலில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சிசிடிவி கேமரா இணைப்பும் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக, சம்பவத்ஹின்போது திட்டமிட்டு சிசிடிவி கேமரா இணைப்பும் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டு உள்ளது என்று தற்சமயம் தெரியவந்து இருக்கிறது. இதனை தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் தான் கொடநாடு பங்களாவில் சிசிடிவி ஆப்பரேட்டர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டது மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கியது.சிசிடிவி ஆபரேட்டர் தினேஷ் தற்கொலை செய்துகொண்டதால் சிசிடிவி கேமரா திடீரென்று துண்டிக்கப்பட்டது ஏன் என்பது தொடர்பாக விவரம் தெரியாமல் இருக்கின்றது. இதனை தொடர்ந்து கொலை மற்றும் கொள்ளைச் சம்பவத்தின் போது மின் இணைப்பு எவ்வாறு துண்டிக்கப்பட்டது என்ற மருது விசாரணையை தற்சமயம் ஆரம்பித்திருக்கிறார்கள் காவல் துறையை சார்ந்தவர்கள்.

கோடநாடு எஸ்டேட்டில் 24 மணி நேரமும் மின்சாரம் இருக்கும் விதத்தில் தான் வழி செய்யப்பட்டுள்ளது. கோத்தகிரியில் இருந்து மண்தரையில் மின்கம்பிகள் புதைக்கப்பட்டு 24 மணி நேரமும் தடையில்லாத மின்சாரம் கிடைக்குமாறு செய்யப்பட்டு இருக்கிறது. கோத்தகிரியில் இருந்து தரை வழியாக வரும் மின்சாரம் கொடநாடு பங்களாவில் இருக்கும் மின்மாற்றியின் மூலமாக மின்சாரம் பெறப்பட்டு இருக்கின்றது. இந்த மின்மாற்றியில் தான் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது என்பது மின்சார வாரிய அதிகாரிகளிடம் தற்சமயம் காவல்துறையினர் நடத்திய அணையில் தெரியவந்து உள்ளது.

மின்சார வாரிய அதிகாரிகளிடம் இருந்து வாங்கப்பட்ட புதிய தகவல்கள் அறிக்கையாக தயார் செய்து அவற்றையும் உதகமண்டலம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மிக விரைவில் தாக்கல் செய்ய இருப்பதாக காவல்துறையினர் சார்பாக சொல்லப்படுகிறது.