அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனல்ட் டிரம்ப் இந்த மதம் வருகிற ஜனவரி 12 ம் தேதி அதிபராக பதவியேற்க உள்ளார். மேலும் இவர் பதவியேற்ற 24 மணி நேரத்திற்குள் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போரை நிறுத்துவதாக சபதம் எடுத்துள்ளார். இந்நிலையில் ஹாமாஸுக்கு இரண்டு வாரங்கள் மட்டும் கெடு விதித்துள்ளார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த போர் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் உலக போராக வெடிக்க இருந்த நிலையில் தற்போது அமைதி நிலையில் உள்ளது. இந்நிலையில் டிரம்ப் பதவி ஏற்றவுடன் இந்த போரினை உடனடியாக நிறுத்துவதாக கூறியிருந்தார். ஹமாஸ் அமைப்பினர் நிறைய பிணைய கைதிகளை பிடித்து வைத்துள்ளதாகவும் அதில் அமெரிக்க பிணைய கைதிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ஹமாஸுக்கு டொனால்ட் டிரம்ப் 2 வாரங்கள் மட்டும் கெடு விதித்துள்ளார். அதில் அவர் நான் பதவியேற்ற 2 வாரத்திற்குள் நீங்கள் பிடித்து வைத்திருக்கும் பிணையக் கைதிகளை விடுவிக்க ஒப்பந்தம் செய்து விடுவிக்க வேண்டும். ஒருவேளை இந்த ஒப்பந்தத்தை செய்யாவிட்டால் மத்திய கிழக்கில் மோதல் வெடிக்க தொடங்கும் என டொனல்ட் டிரம்ப் ஹமாஸ் அமைப்புக்கு கெடு விதித்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.