இந்தியாவில் இருந்து பலர் அமெரிக்காவிற்கு படிப்பதற்காகவோ பணி புரிவதற்காகவோ அதிக அளவில் சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்பொழுது அதனை எளிதாக்கும் வகையில் சென்னையை தொடர்ந்து பெங்களூரிலும் அமெரிக்க தூதரகம் திறக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
இது குறித்து, இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி தெரிவித்திருப்பதாவது :-
பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட உள்ளது என்றும், அது 2025 ஆம் ஆண்டு ஜனவரிக்குள் செயல்படத் தொடங்கும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளார்.இரு நாடுகளுக்கிடையேயான வளர்ந்து வரும் உறவில் பெங்களூரில் அமெரிக்க தூதரகம் முக்கிய மைல்கல்லாகும். “இந்தியாவின் சிலிகான் வேலி” என்று அழைக்கப்படும் பெங்களூரு, தொழில்நுட்பம் மற்றும் ஸ்டார்ட்அப், இன்னோவேஷனுக்கு முக்கிய பகுதியாக திகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.
மேலும் பெங்களூரில் அமெரிக்க தூதரகம் திறக்கப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கிடையேயான போக்குவரத்து, வர்த்தகம், பொருளாதாரம் அதிகரிக்க வேகமான வழியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
குறிப்பு :-
பெங்களூரு மற்றும் அகமதாபாத்தில் புதிய தூதரகங்களை திறப்பது குறித்த அறிவிப்பு, பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்க பயணத்தின் போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் 2023 ஆம் ஆண்டு சந்தித்த போது இணைந்து வெளியிட்டிருக்கின்றனர்.