இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

Photo of author

By Parthipan K

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

Parthipan K

American woman who brutally assaulted Indian women? Viral video scene!.. Racial attacks?..

இந்திய பெண்களை கொடூரமாக தாக்கிய அமெரிக்க பெண்? வைரலான வீடியோ காட்சி!..இன வெறி தாக்குதல்களா?..

டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இந்திய நாட்டை சேர்த்த நான்கு பெண்கள் அங்குள்ள ஓட்டலில் இரவு நேரம் சாப்பிட்டு விட்டு வெளிய வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த ஒரு அமெரிக்க பெண்மணி தகாத வார்த்தையால் ஆபாசமாக திட்டிவுள்ளார்.

அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை பார்த்து நான் இந்தியர்களை அடியோடு வெறுக்கிறேன்.இந்த இந்தியர்கள் அனைவரும் தங்களின் சந்தோசத்திற்காக அமெரிக்காவிற்கு வருகின்றனர்.நான் எங்கு சென்றாலும் இந்திய  பெண்கள் அனைவரும் அங்கு வருகிறீர்கள்.

இந்தியாவில் நல்ல வாழ்க்கை இல்லாததால் தான் நீங்கள் அனைவரும் அமெரிக்காவுக்கு வருகிறீர்கள்.இங்கு வந்துள்ள அனைவரும் மீண்டும் இந்தியாவிற்கே திரும்பி செல்லுங்கள் என்று கத்தியுள்ளார்.பின்னர் அந்த அமெரிக்க பெண்மணி இந்திய பெண்களை சரமாரியாக தாக்க தொடக்கிவிட்டார்.

இந்த சம்பவத்தை வீடியோ எடுத்து ஒருவர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார்.அதில் அவர் கூறியதாவது,இந்த சம்பவம் டெக்சாசிஸ் டல்லாஸ் என்ற பகுதியில் என் அம்மாவும் மூன்று நண்பர்களும் இரவு உணவிற்காக சென்ற பிறகு நிகழ்வு என அதில் பதிவிட்டுள்ளார்.இந்திய பெண்களை அமெரிக்க பெண்மணி தாக்கும் காட்சி அமெரிக்க முழுவதும் உள்ள இந்திய பெண்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த வீடியோ மிக வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.இதனை தொடர்ந்து அந்த அமெரிக்க பெண்மணியை டெக்சாசிஸ்ல் உள்ள போலீசார்கள் கைது செய்தனர்.மேலும் அந்த பெண்மணியிடம் போலீசார்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த விசாரணையில்  மெக்சிகோவை பூர்விகமாக கொண்டவர் எனவும் மேலும் அவரது பெயர் எச்மரால்டா அப்டன் என்பதும் தெரிய வந்தது.இதனை தொடர்ந்து இந்தியர்களின் மீதான இனவெறி தாக்குதல் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.