பழனிச்சாமிக்கு அடிபணிந்த அமித்ஷா!.. அண்ணாமலையை இப்படி டீல்ல விட்டாரே!….

Photo of author

By அசோக்

பழனிச்சாமிக்கு அடிபணிந்த அமித்ஷா!.. அண்ணாமலையை இப்படி டீல்ல விட்டாரே!….

அசோக்

annamalai

சில வருடஙகளுக்கு முன் தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டவர் அண்ணாமலை. இவர் கர்நாடகாவில் காவல் துறையில் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவர். எதிர்கட்சி தலைவராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தும் அவர் பெரிதாக எதையும் பேசாத நிலையில், அண்ணாமலையோ திமுகவுக்கு எதிராக பேசி ஸ்கோர் செய்தார். இதனால் மக்களால் கவனிக்கப்பட்டார் அண்ணாமலை.

இது திமுகவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், அண்ணாமலை இருக்கும் வரை நம்மை யாரும் மதிக்க மாட்டார்கள் என பழனிச்சாமியே யோசித்ததாக சொல்லப்பட்டது. எனவே, சமீபத்தில் அமித்ஷாவை சந்தித்து பேசியபோது அண்ணாமலையை தமிழக பாஜக தலைவர் பதவியிலிருந்து தூக்கினால் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் சேர்கிறோம் என பழனிச்சாமி சொன்னதாக செய்திகள் வெளியானது.

எனவே, தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி கொடுக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் கசிந்தது. இதுபற்றி கருத்து சொன்ன அண்ணாமலை ‘என் பதவியை தாராளமாக எடுத்துக்கொள்ளட்டும். மாநில தலைவர் பதவி என்பது வெங்காயம் போன்றது. உரித்து பார்த்தால் அதில் ஒன்றும் இல்லை. நான் எப்போதும் பதவிக்காக அரசியலுக்கு வந்தவன் கிடையாது. பதவியை தூக்கிப்போட்டு வந்தவன்’ என பேசியிருந்தார். ஆனால், தேர்தல் முடியும் வரை அண்ணாமலையே பாஜக தலைவராக இருக்கட்டும் என சிலர் அமித்ஷாவுக்கு கோரிக்கை வைத்தனர்.

ஒருபக்கம் தமிழக பாஜக தலைவர் லிஸ்ட்டில் வானதி சீனிவாசன், கருப்பு முருகானந்தம், தமிழிசை சவுந்தர்ராஜன் உள்ளிட்ட சிலர் இருக்கிறார்கள். இந்நிலையில், தமிழக பாஜக தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக பாஜக தேர்தல் பொறுப்பாளர் கிஷண் ரெட்டி வருகிற 7ம் தேதி சென்னை வருகிறார். 7 மற்றும் 8ம் தேதி என 2 நாளும் அவர் சென்னையில் தங்கி அவர் ஆலோசனை செய்யவிருக்கிறார். நடக்கும் விஷயங்களை பார்க்கும்போது பழனிச்சாமி வைத்த கோரிக்கையை அமித்ஷா ஏற்றுக்கொண்டதாகவே பார்க்கப்படுகிறது. இதன் மூலம் வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது.