IAS அதிகாரிகளை மிரட்டும் அமித்ஷா.. தேர்தல் ஆணையம் எடுத்த ஆக்ஷன்!!
நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்தும் தற்பொழுது வரை பரப்பரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் தான் அரசியல் வட்டாரம் உள்ளது.அந்த வகையில் தேர்தல் முடியும் பட்சத்தில் பிரதமர் மோடி ஏன் தமிழகம் வந்து தியானம் செய்ய வேண்டும் இதெல்லாம் ஓர் விளம்பரம் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் மத்திய மந்திரி அமித்ஷா மீது குற்றச்சாட்டு ஒன்றை சுமத்தியுள்ளார்.அதாவது இந்தியா கூட்டணி வெற்றியை காண இருக்கும் நிலையில் இதனை கண்டு தேர்தல் முடிவுகளில் மாற்றம் செய்யக்கோரி அமித்ஷா 150 மாவட்ட ஆட்சியர்களை மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.
இந்த மாவட்ட ஆட்சியர்கள் எந்த ஒரு களங்கமும் இன்றி தேர்தல் முடிவுகளில் உண்மையை நிலைநாட்ட வேண்டும்.மேற்கொண்டு ஜூன் நான்காம் தேதி மக்கள் தான் வெற்றி பெறப் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.இவ்வாறு இவர் மத்திய மந்திரி அமித்ஷா மீது குற்றம் சுமத்திய காரணத்தினால் தேர்தல் ஆணையம் இது குறித்து விளக்கம் அளிக்க கோரியுள்ளது.
அந்த வகையில், தற்போது வரை மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து அமித்ஷா மிரட்டுவது குறித்து எந்த ஒரு புகாரும் வரவில்லை.எனவே ஒரு மூத்த அரசியல்வாதி இவ்வாறு கூறுவது மக்கள் மத்தியில் அவதூறை பரப்புவதாக உள்ளது.இது குறித்து உண்மை தன்மை மற்றும் ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதுமட்டுமின்றி இவ்வாறு ஓர் பெரிய கட்சியில் இருக்கும் மூத்த அதிகாரி இப்படிப்பட்ட அறிக்கைகளை முன் வைத்தால் தேர்தல் நடத்தை விதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை என்பதே இருக்காது.மக்களின் நலனுக்காக இதனையெல்லாம் வெளியே கொண்டு வருவது கட்டாயம்.எனவே இது குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.