அம்மா இலவச இருசக்கர வாகனம் வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்கலாம்.

0
141

அம்மா இலவச இருசக்கர வாகனம் வேண்டுமா? இப்போதே விண்ணப்பிக்கலாம்.

மறைந்த தமிழக முதல்வரால் கடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது அதிமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு இலவச இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.இது பெண்கள் மத்தியில் ஒரு பெரிய மிற்றத்தை ஏற்படுத்தியது.
இதுவும் கடந்த தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

அவரைத் தொடர்ந்து ஆட்சியில் உள்ள அதிமுக அரசு இத்திட்டத்தை செயல்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

இத்திட்டமானது முழுக்க முழுக்க பெண்களுக்கானது மட்டுமே.பெண்கள் மட்டுமே இத்திட்டத்தில் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் நபர் 8 ஆம் வகுப்பு வரை படித்திருந்தால் போதுமானது.18 முதல் 40 வயது வரை உள்ள அனைத்து பெண்களும் இதில் விண்ணப்பிக்க தகுதி படைத்தவர்களாக உள்ளனர்.

விண்ணப்பிக்கும் நபருக்கான ஆண்டு வருமானம் ₹2,50,000 ஐ விட அதிகமாக இருந்தால் அவர் விண்ணப்பிக்க தகுதியற்றவராக கருதப்படுவார்.

இத்திட்டத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த இரண்டு நபர்கள் விண்ணப்பிக்க இயலாது.அவ்வாறு விண்ணப்பித்தால் அவர்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

இதில் சில பிரிவினருக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.அதாவது மலை பிரதேசங்களில் வாழ்பவர்கள்,விதவைகள்,ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின பெண்கள்,35 வயதிற்கு மேல் திருமணம் ஆகாத பெண்கள் போன்றவர்களுக்கு முன்னுரிமையும் வழங்கப்படுகிறது.

இதில் அதிகபட்சம் 25,000 வரை மானியம் வழங்கப்படுகிறது.அதாவது வாகனத்தின் விலை 50,000 க்குள் இருந்தால் 25% மானியமும் 50000 ஐ விட அதிகமாக இருந்தால் ₹25000 மும் வழங்கப்படுகிறது.

விண்ணப்பதாதர் குறைந்தபட்சம் LLR ஆவது வைத்திருக்க வேண்டும்.இதற்கான விண்ணப்பம் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் நகர்புற அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும்.இதனை பூர்த்தி செய்து அதே அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது பதிவுத்தபால் மூலமோ அளிக்கலாம்.

Previous articleபாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 8 மாத கர்ப்பிணி கமாண்டோ! ஓய்வு எடுக்க மறுப்பு!
Next articleபெண் குழந்தைகள் இதனால்தான் நாடக காதலில் சிக்குகிறார்கள் : மகளிர் தின விழாவில் சௌமியா அன்புமணி திட்டவட்டம்!