அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு!

0
128

அம்மா உணவகங்களில் அதிரடி விசிட்..! வெவ்வேறு இடங்களில் தமிழக முதல்வர் ஆய்வு!

கொரோனா பாதிப்பினால் நாடு முழுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் உணவகங்கள் மூடப்பட்டு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் ஏழை மக்களுக்காக உருவாக்கப்பட்ட அம்மா உணவகம் இக்கட்டான சூழலில் மிகப்பெரும் ஆறுதலாய் அமைந்துள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அம்மா உணவகங்களில் தமிழக முதல்வர் அதிரடி விசிட் செய்து வருகிறார். அங்கு தயாரிக்கப்படும் உணவுகள் தரமாக உள்ளனவா என்றும், உணவை தயாரிக்க போதிய சமையற் பொருட்கள் உள்ளதா என்றும் நேரடியாக ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சென்னை சாந்தோம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்திற்கு முதல் சென்று உணவுகளின் தரம் மற்றும் ஆய்வினை மேற்கொண்டார். இதனையடுத்து கலங்கரை விளக்கம் பகுதியில் உள்ள அம்மா உணவக பகுதியிலும் எடப்பாடி பழனிச்சாமி உணவு குறித்த ஆய்வுகளை தொடர்ந்து நேரடியாக களத்தில் இறங்கி மேற்கொண்டு வருகிறார்.

அம்மா உணவகங்களில் ஒரு நாளைக்கு மட்டுமே பல லட்சம் இட்லி மற்றும் சப்பாத்தி உணவுகள் தயார் செய்யப்பட்டு வழங்கி வருகின்றனர். தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள் மூடப்பட்ட நிலையில் வீடில்லாத ஏழைகளும், வீடு இருந்தும் உணவு இல்லாமல் தவிப்பவர்களுக்கு அம்மா உணவகத்தின் சேவை அத்தியாவசியமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleரஷ்ய அதிபரை சந்தித்தவருக்கு கொரோனா தொற்று : புதின் நோயை பரப்பினாரா?
Next articleகொரோனா தடுப்பு: நடிகர் சிவகார்த்திகேயன் 25 லட்சம் நிதியுதவி!