அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை இல்லை!!! வெளியான முக்கிய அறிவிப்பு!!!
சென்னை மாநகராட்சியில் இயங்கி வரும் அம்மா உணவகங்களில் இனிமேல் சப்பாத்தி விற்பனை செய்யப்படாது என்று மநாகராட்சி அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
தமிழகம் முழுவதிலும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றது. இந்த அம்மா உணவகங்கள் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தலைமையிலான அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. முதல்வர் முக ஸ்டாலின் தலைமையிலான திமுக கட்சி ஆட்சியமைத்த பிறகும் அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றது.
சென்னை மாநகராட்சியில் மட்டும் 407 அம்மா உணவகங்கள் சொயல்பட்டு வருகின்றது. இந்த அம்மா உணவகங்களில் காலை உணவாக இட்லி ஒரு ருபாய்க்கும் பொங்கல் 5 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
மதிய உணவாக சாம்பார் சாதம், எலுமிச்சை சாதம், கறிவேப்பிலை சாதம் ஆகிய சாதம் வகைகள் 5 ரூபாய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. மேலும் இரவு சப்பாத்தி 3 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த விலைக்கு உணவுகள் விற்பனை செய்யப்படுவது ஏழை எளிய மக்களுக்கு வசதியாக இருக்கின்றது. மேலும் ஒரே வகை உணவுகள் தினமும் வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் மக்களிடையே வரவேற்பும் குறைந்து வருகின்றது. என்னதான் இருந்தாலும் அம்மா உணவகத்தை நம்பி பசியாறும் மக்கள் இன்னும் உள்ளார்கள்.
இதையடுத்து மாலை நேரத்தில் உணவு வாங்க சென்றால் சப்பாத்தி இல்லை என்று அம்மா உணவகங்களில் இருப்பவர்கள் தினமும் கூறுகிறார்கள் என்று புகார் எழுந்து வருகின்றது. மேலும் சாலையோர கடைகளுக்கு அம்மா உணவகங்களில் உள்ள சப்பாத்திகளை மொத்தமாக மூன்று ரூபாய் என்ற அடிப்படையில் விற்பனை செய்து விடுவதாகவும் புகார்கள் எழுந்து வருகின்றது.
இதுபோல புகார்கள் தொடர்ந்து வந்ததால் இனி சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 407 அம்மா உணவகங்களில் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்படுவதாக அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. மேலும் மாநகராட்சியில் இருந்து அம்மா உணவகங்களுக்கு மாவு வழங்கவில்லை. இன்னும் ஒரு மாதத்திற்கு மாவு வழங்கப்படாது. இதன் காரணமாகவும் சப்பாத்தி விற்பனை நிறுத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
அம்மா உணவகங்களை நடத்துவதால் அரசுக்கு ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் நஷ்டம் தான் ஏற்படுகின்றது. ஆனால் இதை முறையாக மேம்படுத்தி ஒழுங்காக பராமரித்து குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டால் பல்லாயிரக் கணக்கான மக்கள் பயன் பெறுவார்கள் என்றும் கூறுகின்றனர்.