மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

0
41
#image_title

மகளிர் உரிமைத் தொகை திட்டம்.. 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது!!

குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் உரிமைத் தொகை திட்டத்தை வருகின்ற செப்டம்பர் 15 அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க இருக்கிறார்.

முன்னதாக கடந்த ஜூலை 20 முதல் இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் வழங்கப்பட்டு ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முதல்கட்ட விண்ணப்ப பதிவும்,ஆகஸ்ட் 5 முதல் 12 அம் தேதி வரை இரண்டாம் கட்ட விண்ணப்ப பதிவும் நடத்தப்பட்டன.முன்பு பதிவு செய்யாத மகளிர்களுக்கு ஆகஸ்ட் 18,19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விண்ணப்பம் செய்ய சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.இதனை தொடர்ந்து செப்டம்பர் 5 வரை பெறப்பட்ட விண்ணப்பங்களின் மொத்த எண்ணிக்கை 1.70 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பம் செய்த விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டதா இல்லை நிராகரிக்கப்பட்டதா என்ற மெசேஜ் அனைவரின் தொலைபேசி எண்ணிற்கும் அனுப்பப்பட்டுள்ளது.உரிமை தொகை பெற தகுதி இருந்தும் விண்ணப்பங்கள் ஒருவேளை நிராகரிக்கப்பட்டால் அதை மறுபரிசீலனை செய்யவும் வாய்ப்பு இருக்கிறது.

மேலும் இந்த கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் அரசு ஊழியர்கள்,வருமான வரி செலுத்தும் மகளிர்,முதியோர் ஓய்வூதியம் பெறுவோர்,கார் வைத்திருப்பவர்கள்,ஆண்டிற்கு 3600 யூனிட் மினசாரம் பயன்படுத்தும் மகளிர்கள் இந்த திட்டத்தில் பயன்பெற முடியாது என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 3 லட்சம் அரசு ஊழியர்கள்,சொந்த கார் வைத்திருப்பவர்கள்,வருடத்திற்கு 3,600 யூனிட் மின்சாரம் பயன்படுத்துபவர்கள் என சுமார் 57 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்காக விண்ணப்பித்து இருக்கின்றனர் எனவும் அந்த விண்ணப்பங்கள் அனைத்தும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மனு நிராகரிப்பட்டதற்கு காரணம் என்னவென்று சம்மந்தப்பட்ட மகளிருக்கு அரசு தரப்பில் இருந்து அவர்களது தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.