14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

0
132
Amma restaurants closed in 14 places!! What is the next step of Tamil Nadu government??
Amma restaurants closed in 14 places!! What is the next step of Tamil Nadu government??

14 இடங்களில் மூடப்பட்ட அம்மா உணவகங்கள்!! தமிழக அரசின்  அடுத்த கட்ட நடவடிக்கை என்ன??

ஏழைமக்களும், உழைக்கும் மக்களும் ,தினக்கூலிகளும் மலிவு விலையில் தரமான உணவுகளை உண்ணும் வண்ணம் அம்மா அவர்களால் அறிமுக படுத்தப்பட்ட திட்டம்தான் அம்மா உணவகம்.

இது சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட  வார்டுக்கு இரண்டு என்கின்ற அடிபடையில் சுமார் 407 க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்கள் இயங்கி வருகின்றனது.இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்று வருகின்றனர்.அம்மா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட அம்மா உணவகங்கள் தற்பொழுது மிகவும் மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டு நஷ்டத்தில் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் அம்மா உணவகத்தில் கிரைண்டர்,மிக்சி ,பாத்திரம் உள்ளிட்டவை மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதனால் அங்கு தினமும் உணவு செய்யும் ஊழியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இதனால் உணவு தயாரிக்க தாமதம் ஏற்படுகின்றது. இதன் காரணமாக உபகரணங்களை சரி செய்து  தர வேண்டும் என்று ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

இப்படி பல குறைகளுடன் இயங்கப்படும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து நஷ்டம் அடைந்து வருவதால் இதனை மூடுவதாக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.அந்த வகையில் நஷ்டத்தில் இயங்கி வரும் அம்மா உணவகங்கள் மூடப்பட உள்ளது.

அதில் தற்பொழுது சென்னையில் மட்டும் செயல்பாட்டில் உள்ள 407 உணவகங்களில்  14 அம்மா உணவகங்கள் மூடப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்பொழுது செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள  தியாகராய ரோட்டில் அமைந்துள்ள அம்மா உணவகம் இடிக்கப்பட உள்ளது.

இடிக்கப்பட்ட அம்மா உணவகத்திற்கு பதிலாக மாநகராட்சி கட்டத்தில் வேறொரு அம்மா உணவகத்தை அமைத்து தர வேண்டும் என்று மக்கள் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.

Previous articleகுடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!
Next articleஆக்சிஜன் மாஸ்க்கிற்கு பதிலாக “டீ கப் ஆ?? அரசு மருத்துவமனையின் அலட்சிய செயலால் பரபரப்பு!!