மரு முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களும் இந்த ஒரே செடியால் தீரும்!

Photo of author

By Kowsalya

மரு முதல் மலச்சிக்கல் வரை அனைத்து நோய்களும் இந்த ஒரே செடியால் தீரும்!

இந்த மூலிகையின் பெயர் அம்மான் பச்சரிசி. இது சாலை ஓரங்களில் அதிகமாக கிடைக்கும். இதை பார்த்தால் விட்டு விடாதீர்கள். அதனுடைய பலன்கள் மருத்துவ குணங்கள் அதிகம்.

 

இதில் இருவகையான அம்மான் பச்சரிசி உள்ளது. வெண்மை நிறத்தில் இருக்கும். சிவப்பு நிறத்தில் காணப்படும். இரண்டுக்கும் ஒரே மருத்துவ குணம் தான்.

1. அம்மான் பச்சரிசி செடியை உடைத்தால் பால் வெளிப்படும். அதை மருக்கள் மீது தடவினால் மருக்கள் ஒரே நாளில் உதிர்ந்து விடும். நாள்பட்ட மருவாக இருந்தால் தொடர்ந்து 7 நாட்கள் தடவுங்கள் உதிர்ந்து விடும்.

2. வாயில் புண் மற்றும் உதடு ஓரங்களில் புண் ஏற்படும். புண்கள் மீது இந்த செடியின் பாலை தடவினால் விரைவில் காய்ந்து விடும்.

3. இந்த அம்மான் பச்சரிசி கீரையை அனைத்து கீரைகளோடு சேர்த்து கூட்டு கீரையாக சமைத்து உண்டு வர அல்சர் குணமாகும் .

4. மேலும் இந்த கீரையை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிட நாள்பட்ட மலச்சிக்கல் சரியாகும்.

5. அம்மான் பச்சரிசி இலையை அரைத்து ஒரு நெல்லிக்காய் அளவு உருண்டை பிடித்து ஒரு டம்ளர் மோரில் கலந்து குடித்து வர பெண்களுடைய கருப்பை பலபடும். வெள்ளைப்படுதல் நீங்கும்.

6. சிவப்பு நிற அம்மான் பச்சரிசியை உலர்த்திப் பொடிசெய்து, 5 கிராம் பசும்பாலில் கலந்து பருகி வர ஆண்களின் விந்தணுக்கள் அதிகரிக்கும்.

7. உடல் சூடு காரணமாக கொப்புளங்கள் ஏற்ப்பட்டால் இந்த இலையை அரைத்து பற்று போட விரைவில் குணமாகும்.

8. சிலபேருக்கு கால் ஆணி,பாத வலி, எரிச்சல் இருக்கும். அதற்கு இந்த இலையுடன் சிறிது மஞ்சள் பொடியை சேர்த்து அரைத்து பூசி வர கால் ஆணி,பாத எரிச்சல் விரைவில் குணமடையும்.

9. இந்த இலையின் பொடியை வெந்நீரில் கலந்து குடித்து வர சளி,இருமல் மற்றும் இளைப்பு நோயின் தா்கத்திலிருந்து விடுபடலாம்.

 

பயன்படுத்தி பயன்பெறுங்கள்.