அம்மானா சும்மா இல்ல டா! தாயை காப்பாற்ற தன் உயிரை தியாகம் செய்த 5 வயது சிறுவன்!
தாய் தந்தையர் பெற்ற பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய காலத்தில் பெற்ற மகன் தன் தாயை காப்பாற்றுவதற்காக தன் உயிரையே விட்ட சம்பவம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கடம்பூர் பகுதியில் தம்பதியினர் இருவர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. தற்பொழுது இத்தம்பதியினருக்கு கார்த்திக் என்ற ஐந்து வயது மகன் உள்ளார். தினந்தோறும் சிறுவன் கார்த்திக்கை தனது வீட்டின் முன் விளையாட கூறிவிட்டு வீட்டில் வேலைகளை செய்வதையே அவரது தாய் வழக்கமாக வைத்துள்ளார்.
வழக்கம் போல் அவரது தாய் கார்த்தியை விளையாட கூறியுள்ளார்.அவ்வாறு விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது பாம்பு ஒன்று இவரது வீட்டிற்குள் நுழைய முற்பட்டுள்ளது. பாம்பு நுழைவதை கண்ட அச்சிறுவன் தனது அம்மாவை கடித்து விடும் என்ற பயத்தில் யாரையும் கூப்பிடாமல் அந்த பாம்பை அவரே விரட்டியுள்ளார். அப்பொழுது, அப்பாம்பு அச்சிறுவனை தீண்டியுள்ளது. உடனே சிறுவன் அலறி துடித்து கீழே விழுந்துள்ளான். சத்தம் கேட்டு ஓடிவந்த அவரது தாய், உறவினர்களை அழைத்து அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அச்சிறுவனை சோதித்த மருத்துவர் இவர் முன்பே இறந்து விட்டார் என்று கூறியுள்ளார். பாம்பிடம் இருந்து தாயை காப்பாற்ற தன் உயிரையே தியாகம் செய்த ஐந்து வயது சிறுவனின் செயல் அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.