அமமுகவின் முக்கிய தலைவர் மறைவு! சோகத்தில் டிடிவி தினகரன்!
தமிழ்நாட்டின் நோய்த்தொற்று பரவல் மிக தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய ,மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் இந்த நோய்களை கட்டுப்படுத்துவது மத்திய, மாநில அரசுகளுக்கு சுலபமாக இல்லை என்று சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் , இந்த நோய் தொற்று நோய் கட்டுப்படுத்துவதற்கு ஒரேவழி தடுப்பூசி தான் என்ற நிலையில், நாடு முழுவதும் தடுப்பூசிகளை எல்லோரும் போட்டுக்கொள்ள வேண்டும் என்று முதல்வர் முதல் பிரதமர் வரை வலியுறுத்தி வருகிறார்கள். இந்த நோயினால் பாதிக்கப்பட்டு அரசியல் பிரமுகர்கள், திரைத்துறையை சார்ந்தவர்கள், பாடலாசிரியர்கள், பின்னணி பாடகர்கள் என்று பலரும் உயிரிழந்திருக்கிறார்கள்.
இந்த நோய் தொற்றின் இரண்டாவது அலையில் சாதாரண மக்களை விடவும், முக்கியப் பிரமுகர்கள் பலரும் மடிந்து போயிருக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. இந்த சூழ்நிலையில், காஞ்சிபுரம் மாமல்லன் நகர் பகுதியில் வசித்து வருபவர் மனோகரன் இவர் சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவரும் கூட என்று சொல்லப்படுகிறது. காஞ்சிபுரம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் நகர செயலாளராக இருந்து வந்தார். அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பாக காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இதற்கிடையில் வாக்கு எண்ணும் வேலையின் போது அவருக்கு நோய் தொற்று பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூந்தமல்லியில் இருக்கின்ற ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்து வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் இன்று அவர் இயற்கை எய்தி இருக்கிறார் அவருடைய மறைவு காரணமாக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் உள்பட நிர்வாகிகள் வரை பலரும் சோகத்தில் ஆழ்ந்து இருக்கிறார்கள்.