16, 500 வீடுகளை சேதப்படுத்திய டவ் தே புயல்! புயலின் கோரத் தாண்டவத்தில் 3 பேர் பலி! மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் பரிதவிப்பு!

0
104

இந்த டவ் தே புயலின் கோரத் தாண்டவத்தில் சிக்கி அகமதாபாத் மக்கள் பரிதவித்து வருகின்றனர். அதிலும் அகமதாபாத்தின் சௌராஷ்டிரா பகுதியில் 16,500 வீடுகளையும் சேதமாக்கி உள்ளது. மேலும் 3 பேர் பலியாகியுள்ளனர்.

181 மின் கம்பங்கள் மற்றும் 196 சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மேலும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்ட சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அகமதாபாத்தில் உள்ள சோம்நாத் மாவட்டத்தில் அருகில் சௌராஷ்டிரா கடற்கரையில் திங்கட்கிழமை இரவு நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர் சௌராஷ்ட்ரா பகுதிகளில் மூன்று பேர் இறந்துள்ளனர். 100 கிராமங்களில் மின் இணைப்பு தடைபட்டுள்ளது. மேலும்16,500 வீடுகள் குடிசைகள் சேதம் அடைந்துள்ளது. 40000 மரங்கள் விழுந்துள்ளது. 196 சாலைகள் மூடப்பட்டு உள்ளது. மேலும் திங்கட்கிழமை முதல் அதிக மழை பெய்ததால் இப்பகுதியில் பல ஆறுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

மேலும் அம்மாநிலத்தில் முதல்வர் பேசுகையில் அதிகாரப்பூர்வமாக இதுவரை மூன்று இறப்பு அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
வாபி பகுதியில் ஒருவர் இறந்துள்ளார். ராஜ்கோட் மாவட்டத்தில் வீடு விழுந்து சிறுவன் இறந்துள்ளான். பாவ் நகரில் 80 வயது மூதாட்டி ஒருவர் இறந்துள்ளார்.

சுமார் 2500 கிராமங்களிலிருந்து மின்வெட்டு பதிவாகியுள்ளதாகவும், அவற்றில் 184 இடங்களில் மீண்டும் மின்வெட்டு சரியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த கொரோனா காலகட்டத்தில் மருத்துவமனைகளில் மின்வெட்டு செயல்பாடுகள் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 1400 மருத்துவமனைகளில் 16 மருத்துவமனைகளில் மட்டுமே மின்வெட்டு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அதில் 12 மருத்துவமனைகளில் மின்சாரம் மீட்டமைக்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள 4 மருத்துவமனைகளில் டீசல் ஜெனரேட்டர் வைத்து செயல்படுவதாக கூறி உள்ளனர்.

செவ்வாய்க்கிழமை காலையில் இருந்து மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து அடைமழை பெய்து வருவதால் அம்ரேலி மாவட்டத்தில் மட்டும் திங்கள் முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை 212 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

author avatar
Kowsalya