சசிகலாவை நேரில் சந்தித்த முக்கிய கட்சியின் வேட்பாளர்! அதிர்ச்சியில் அரசியல் தலைவர்கள்!

0
124

வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சசிகலா கடந்த 4 வருட காலமாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தார் இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 27ம் தேதி அவர் தண்டனை காலம் முடிவடைந்து விடுதலை செய்யப்பட்டார்.இதற்கு முன்னதாக தண்டனை காலம் முடிவடைவதற்கு சுமார் ஒரு வாரகாலம் முன்னதாகவே சசிகலாவிற்கு கொரோனா ஏற்பட்டது. இதனால் பெங்களூரு மருத்துவமனையில் சிறிது காலம் சிகிச்சை பெற்றார். அந்த சமயத்தில் இனி சசிகலா சிறைக்கு செல்லக்கூடாது என்று முடிவில் அவருடைய குடும்பத்தார் தீவிரமாக இருந்தார்கள்.

அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்கள் இந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி தண்டனை காலம் முடிவுற்று சசிகலா விடுதலை பெற்றார்.
விடுதலை அடைந்த பின்பு பெங்களூரிலேயே சிறிது காலம் ஓய்வு எடுத்து வந்தார். சசிகலா ஆதரவு பிப்ரவரி மாதம் எட்டாம் தேதி தமிழகம் வந்து சேர்ந்தார்.


தமிழகம் வந்த சசிகலாவிற்கு வரும் வழிநெடுகிலும் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை பார்த்த தமிழகத்தின் முக்கிய அரசியல் கட்சிகள் அனைத்தும் அதிர்ச்சிக்குள்ளான அதோடு அவர் தீவிர அரசியலில் ஈடுபடப் போகிறார் என்பது போன்ற கருத்துகள் தமிழகம் முழுவதும் உலாவ தொடங்கியது.

இந்த நிலையில், தமிழகம் வந்து சேர்ந்த சசிகலா தமிழகம் வந்ததிலிருந்தே எந்தவித அரசியலிலும் ஈடுபடாமல் ஒதுங்கியே இருந்தார். திடீரென்று ஒருநாள் அவர் அரசியலிலிருந்து விலகுவதாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார். இது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை உண்டாக்கியது. ஆனால் அவருடைய இந்த அறிவிப்பு நிரந்தரமானது அல்ல தற்காலிகமானதுதான் என்பது போன்ற பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியது.எதோ ஒரு முக்கிய காரணத்திற்காக தான் அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்து இருக்கிறார். ஆனாலும் அவர் முழுமையாக அரசியலில் இருந்து விலகப் போவதில்லை என்பது போன்ற கருத்துக்கள் ஏறத் தொடங்கினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சசிகலா தஞ்சாவூர் போயிருக்கிறார். அங்கே தன்னுடைய கணவரின் தம்பி பழனிவேல் அவர்களின் பேர குழந்தைகளின் காதணி விழாவில் பங்கேற்று விட்டு அதன் பிறகு திருவிடைமருதூரில் இருக்கும் மகாலிங்கசுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு அங்கிருந்து நேற்று காலை ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலுக்கு சென்றார். அவருடன் அவருடைய உறவினர்களும் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கே சாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ஸ்ரீரங்கம் சட்டசபைத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சாருபாலா தொண்டைமான் சசிகலாவை சந்தித்து கொஞ்ச நேரம் உரையாற்றி இருக்கிறார். இது எல்லோர் மத்தியிலும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. அரசியலிலிருந்து உறங்கிய பிறகு அவர் ஒரு கட்சியின் வேட்பாளரை சந்தித்தது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.

Previous articleதொடரை வெல்ல போவது யார்?
Next articleடீக்கடையில் சித்து விளையாட்டை தொடங்கிய திமுகவின் முக்கிய புள்ளி! அதிர்ச்சியடைந்த டீக்கடை உரிமையாளர்!