சொந்த கட்சிக்கு எதிராகவே சமூகவலைதளத்தில் கொந்தளித்த தேமுதிக தொண்டர்கள்! அதிர்ச்சியில் தேமுதிக தலைமை!

0
205

அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக திமுக தலைமை கேட்ட தொகுதிகளை கொடுக்கவில்லை என்று அந்த கட்சி அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டது.இதனை தொடர்ந்து பல விமர்சனங்களை அதிமுக மீது தேமுதிக வைத்தது.

அதோடு தமிழ்நாட்டில் அனைத்து தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடப் போகிறோம் யாரிடமும் நாங்கள் போய் சீட்டுக்காக நிற்க வேண்டிய அவசியம் எங்களுக்கு கிடையாது எனவும்,தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது இப்போது அல்ல தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்னரே தேமுதிக நாங்கள் யாருக்கும் பணியதேவையில்லை, யாரிடமும் சீட் கேட்டு நிற்க வேண்டியதில்லை. நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனியாக நிற்கப் போகிறோம் என்பது போன்று பேசி வந்தது.

ஆனாலும் சில காலத்திற்குப் பிறகு நாங்கள் அதிமுக கூட்டணியில் தான் இருக்கிறோம் என்றும் தெரிவித்தது. இதனைத்தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நடைபெற்ற கூட்டணி பேச்சுவார்த்தை தேமுதிக எதிர்பார்த்த தொகுதிகளை அதிக தொகுதிகள் எதிர்பார்ப்பதாக தெரிவித்து அதிமுக அதிக தொகுதிகள் தர மறுத்தது.

இந்த நிலையில், ஒருபுறம் அதிமுகவை வெறுப்பேற்றுவதாக நினைத்துக்கொண்டு நாங்கள் அனைத்து தொகுதிகளிலும் தனியாக போட்டியிட இருக்கிறோம் என்று தெரிவித்துக் கொண்டு, மறுபுறம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்திருக்கிறது.

இந்த விவகாரம் தேமுதிகவின் தொண்டர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது. மறுபடியும் கூட்டணியா அப்படி எனில் நாம் தனியாக போட்டியிட இயலாதா வெறும் பேச்சு மட்டும் தானா என்று தேமுதிகவின் மீது அந்த கட்சியின் தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கிறார்கள். அதோடு மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் அந்த கட்சிக்கு எதிராக அந்த கட்சி தொண்டர்களே கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருவதாக சொல்கிறார்கள்.

Previous articleதிமுக தலைமை வெளியிட்ட திடீர் அறிவிப்பு! அதிர்ச்சியில் மாவட்டச் செயலாளர்கள்!
Next articleதமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?