தமிழகம் முழுவதிலும் சுற்றுப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் சசிகலா! காரணம் என்ன தெரியுமா?

0
82

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூர் சிறையில் இருந்தார்.இந்நிலையில்,அவர் சிறையில் இருந்து விடுதலையான பின்னர் பெங்களூருவில் சுமார் ஒரு வார காலம் ஓய்வில் இருந்து வந்தார்.அதன்பிறகு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி பெங்களூருவில் இருந்து தமிழ்நாட்டிற்கு திரும்பினார். பெங்களூருவில் இருந்து தமிழகம் வந்த சசிகலாவிற்கு வழிநெடுகிலும் மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கப்பட்டது.அந்த சமயத்தில் அந்த வரவேற்பைப் பார்த்த பலரும் சசிகலா தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்தார்கள்.

இதனைத்தொடர்ந்து ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி சென்னையில் அவருக்கு அஞ்சலி செலுத்திய சசிகலா,அவருடைய ஆட்சி அமைவதற்கு பாடுபடுவோம் என தெரிவித்தார்.அவருடைய அறிக்கையை அதிமுகவின் பொதுச் செயலாளர் சசிகலா என குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த விவகாரம் அதிமுகவினர் இடையில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது அதோடு சசிகலா அதிமுகவை கைப்பற்றிவிடுவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும் தீவிர அரசியலில் இறங்கப் போவதாக தெரிவித்துக் கொண்டிருந்த சசிகலா திடீரென்று அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த அறிவிப்பை செய்தியாளர்கள் இடையில் அறிவிக்காமல் ஒரு தனிப்பட்ட அறிக்கை மூலமாக தெரிவித்திருப்பது எல்லோருக்கும் சந்தேகங்களை எழுப்பி இருப்பதாக சொல்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில், நாளை சிவராத்திரியை முன்னிட்டு சசிகலா சென்னை அகத்தியர் திருக்கோவிலுக்கு சென்று அங்கே வழிபாடு நடத்தப் போவதாக தகவல்கள் கிடைத்திருக்கின்றது.மாசி மாத அமாவாசையில் குலதெய்வ வழிபாட்டை முடித்த பின்னர் தமிழ்நாட்டில் இருக்கின்ற பல முக்கிய கோவில்களுக்கு ஆன்மீக ரீதியாக சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார் சசிகலா என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அவருடைய இந்த பயணம் ஆன்மீக ரீதியாக தான் என்று தெரிவித்தாலும் இது அரசியல் ரீதியான பயணமாகவே பார்க்கப்படுகிறது.தமிழகம் முழுவதிலும் பரப்புரை செய்யப்போகிறோம் என்பது போன்ற அறிவிப்பை முன்னரே வெளியிட்டு சசிகலா இப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டு இருந்தால் அது நிச்சயமாகத் தடைபட்டிருக்கும் என்று சொல்கிறார்கள்.

ஆகவே அதனை தவிர்ப்பதற்காகவே இப்போது தமிழகம் முழுவதிலும் இருக்கக்கூடிய கோயில்களுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்திருக்கின்றார் சசிகலா என கூறப்படுகிறது. அந்தவகையில்,அவர் செல்லும் ஒவ்வொரு திருத்தலங்களில் இருந்தும் மக்களிடம் தனக்கு ஆதரவு இருக்கிறதா என்பதை கண்காணிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
அவ்வாறு கண்காணித்த பின்னர் ஜெயலலிதாவிற்கு மக்களிடையே இருந்த ஆதரவு தனக்கு இருக்கிறதா என்பதை சரியாகக் கணித்து அதன் பிறகு அவர் மீண்டும் அரசியலில் இறங்கப் போவதாக தெரிவிக்கிறார்கள்.இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக தலைமை அதிர்ச்சி அடைந்து இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.