19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஆதிதிராவிட மக்களின் முன்னேற்றத்துக்காக அரசியல்,சமயம், இலக்கியம் ஆகியவற்றில் மிக தீவிரமாகச் செய்ல்பட்டவர்கள் தான் அயோத்திதாச பண்டிதர் மற்றும் இரட்டைமலை சீனிவாசன்.
இவர்களின் வாரிசாக இருப்பவர் தான் ரேவதி நாகராஜன் இவர் செட்யூல்டு வகுப்பினர் ஐக்கிய முன்னணி அமைப்பின் பொதுசெயலாளராக உள்ளார்.தன்னுடைய புதல்விகளின் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த பணத்தை நம்ப வைத்து மோசடி செய்ததாக ஒருவர் மீது குற்றசாட்டு கூறியிருந்தார்.மேலும் இந்த குற்றச்சாட்டை ஆதாரத்துடன் விளக்குவதற்கு கடந்த 23 ஆம் தேதி பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு ரேவதி நாகராஜன் கடிதம் எழுதினார்.
அந்த கடிதத்தில் கவிராய பண்டிதமணி க.அயோத்தியதாசர்,திவான் பகதூர் இரட்டைமலை சீனிவாசன் ஆகியோரின் வாரிசான என்னை, முக்கிய பிரமுகர் பணமோசடி செய்து மூன்று வருடமாக ஏமாற்றி வருபவர் தொடர்பாக ஆதாரத்துடன் ஊடகத்தினருக்கு விளக்க உள்ளேன்.ஆகவே தங்கள் பத்திரிக்கை சார்பில் நிருபர்களை அனுப்பி வைத்து செய்தி சேகரித்து வெளியிடுமாறு கேட்டு கொள்வதாக கூறி இருந்தார்.
அதன் பின் நடந்த பத்திரிக்கையாளர் கூட்டத்தில் ரேவதி நாகராஜன் கூறுகையில் விசிக கட்சியின் ஊடக பிரிவில் இருக்கும் திரு.கல்யாணசுந்தரம் திரைப்படம் எடுக்க போவதாக கூறி என்னிடம் 20 லட்சம் வரை கடனாக பெற்றார்.விரைவில் திருப்பி தருவதாகவும் தங்களுடைய பிள்ளைகளுக்கு நானே திருமணம் செய்து வைப்பதாகவும் கூறினார்.ஆனால் இன்று வரை பணத்தை திரும்ப கொடுக்கவில்லை
என்னுடைய மூத்த மகள் திருமணத்தின் போது பணத்தை திரும்ப கேட்டேன் நாளைக்கு தருகிறேன் அக்கா என்று தினந்தோறும் சொல்லி அலைகழித்தார் அதன்பின் சிறிது காலம் கேட்கவே இல்லை அதன் பின் மீண்டும் எனது இளையமகள் திருமணத்தின் போதும் கேட்கும் போது மீண்டும் அதே பதிலை கூறி அலைகழித்தார்.
அதன் பின் விசிக கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களிடமும்,நிர்வாகி வன்னியரசு,பாலசிங்கம் ஆகியோரிடம் கூறினேன்.முதலில் விசாரிக்கிறேன் என்று கூறியவர்கள் அதன் பின் கண்டுகொள்ளவில்லை.அதன் பின் மாவட்ட காவல் ஆணையிரிடம் புகார் தெரிவித்தேன் அவர்களும் ஒருவருடத்திற்கு மேலாக அலைகழித்தார்கள்,விசிக கட்சியின் நிர்வாகிகள் அழைத்த பஞ்சாயத்தில் கலந்து கொண்டு பேசுங்கள் என்றும் கூறினார்கள். தற்போது நான் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறேன் என்று கூறினார்.
இறுதியாக,இந்த பணமோசடியை கண்டித்தும் ,விசிக நிர்வாகிகளை கண்டித்தும் ஆகஸ்ட் 15 முதல் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறி இருக்கிறார்.தற்போது இந்த செய்தி இணையத்தில் தீவிரமாக பரவி வரும் சூழலில் அரசு உடனடியாக இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு நியாயம் கிடைத்திட வழிவகை செய்யவேண்டும் என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல் எழுந்த வண்ணம் உள்ளது.