அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு!.. இதை சாப்பிட்டால் இவளோ பாதிப்பு வருமா?. உங்களின் கவனத்திற்கு?…
28 கிராம் பாதாம் பருப்பில் சுமார் 164 கலோரிகள் இருக்கின்றன. தினசரி உணவுடன் சேர்த்து உட்கொள்ளும்போது அது உங்கள் உடல் எடையை அதிகரிக்கும். எனவே நாள் முழுவதும் 5 முதல் 6 பாதாம் துண்டுகளை மட்டுமே சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
பாதாமில் நார்ச்சத்து அதிகமுள்ளது. அதிகப்படியான நார்ச்சத்து நம் ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கும். எனவே பாதாம் பருப்பை அதிகம் சாப்பிட்டால் வயிறு தொடர்பான பல பிரச்சனைகள் ஏற்படும். இதனால் வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, வயிறு உப்புசம் மற்றும் வயிற்றில் தசை பிடிப்புகள் கூட ஏற்படலாம்.
பாதாமில் குடலில் கரையக்கூடிய ஆக்சலேட் அதிகம்முள்ளது. உடலில் அதிகளவு ஆக்சலேட் இருப்பதால் சிறுநீரக கற்கள் உருவாகும் அபாயம் அதிக அளவு உள்ளது. எனவே பாதாமை குறைந்த அளவே உட்கொள்ள வேண்டும்.
உங்களுக்கு ஒவ்வாமை இருந்தால் பாதாம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்கவும். பாதாம் பருப்பு சிலருக்கு வாய் அலர்ஜி சிண்ட்ரோம் ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. தொண்டை புண் மற்றும் உதடுகளின் வீக்கம் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும். எனவே பாதாமினை அதிக அளவு உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.