கருப்பு நிற கவுனில் நடிகை அமிர்தா ஐயர் வெளியிட்ட புகைப்படம்! வாயை பிளக்கும் ரசிகர்கள்
தமிழில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தின் மூலமாக பிரபலமானவர் தான் நடிகை அமிர்தா ஐயர்.இந்த படத்தில் இவர் நடித்திருந்த கதாபாத்திரமானது பலராலும் பாராட்டப்பட்டது.இதன் மூலமாக இவருக்கு தமிழில் எராளமான ரசிகர்கள் கிடைத்தனர்.இதனைத்தொடர்ந்து இவர் தமிழ் மற்றும் கன்னட மொழியில் பல வாய்ப்புகளை பெற்றுள்ளார்.
பெங்களூரை பூர்வீகமாக கொண்ட இவர் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் ஈடுபட்டுள்ளார்.ஐடி நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டு கூடவே இந்த மாடலிங் துறையிலும் நண்பர்களுடன் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படத்தில் ஒரு கௌரவ தோற்றத்தில் நடித்ததன் மூலமாக இவர் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.இதனைத்தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு வெளியான படைவீரன் திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார்.
இதனையடுத்து படைவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்ததற்காக பல்வேறு திரைப்பட விருதுகளுக்கு சிறந்த அறிமுக நடிகைக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.அடுத்து அதே ஆண்டில் நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான காளி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.