ஆவின் நிறுவனத்திற்கு டப் கொடுக்கும் அமுல்!! தமிழக அரசிற்கு நெருங்கும் நெருக்கடி!!
தமிழகத்தில் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்களுடன் இணைந்து ஆவின் நிறுவனமானது பால் மற்றும் பால் சம்பந்தப்பட்ட பொருள்களை விநியோகித்து வருகிறது. இதில் பச்சை ஆரஞ்சு மஞ்சள் உள்ளிட்ட கொழுப்புகளுக்கு ஏற்றவாறு பால்பாக்கெட் விற்கப்படுகிறது. முன்பை விட தற்போது பால் பாக்கெட்டுகளின் விலை குறைத்து மக்களுக்கு வழங்கி வருகின்றனர்.
ஆனால் தமிழ்நாட்டில் தற்பொழுது வரை பால் தேவையானது சற்று அதிகரித்துதான் காணப்படுகிறது. அந்த வகையில் இதனை பூர்த்தி செய்ய அமுல் நிறுவனம் தமிழகத்தில் வரப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. கிருஷ்ணகிரியில் இது குறித்து நிறுவனம் கடந்த ஆண்டு அமைக்கும் பணி தொடங்கி விட்டதாகவும் வரும் நடப்பாண்டு முதல் அமுல் நிறுவனம் தஞ்சாவூர் சென்னை உள்ளிட்ட பெரிய மாநகரங்களில் ஊடுருவ ஆரம்பித்து விடும் என்றும் கூறுகின்றனர்.
இப்படி அமுல் நிறுவனம் தனது தயாரிப்பை அதிகரிக்கும் பட்சத்தில் மேற்கொண்டு சலுகைகள் விடும் பொழுது ஆவின் தயாரிப்பானது ஈடுகட்ட முடியாத அளவிற்கு இழப்பை சந்திக்கும். இந்த தகவல் தீயாக பரவும் பட்சத்தில் இது குறித்து பால்வளத் வளத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் கூரியுள்ளவதாவது, பால் மற்றும் பால் பொருட்களை, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உரிய தரத்தில் தயாரித்து, குறைவான விலையில் ஆவின் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், சில நிறுவனங்கள் தமிழகத்தில் பால் விற்பனையை தொடங்குவதாக செய்திகள் வெளியிடப்பட்டு உள்ளன.
மற்ற நிறுவனங்களை காட்டிலும், ஆவின் வாயிலாக பொதுமக்களுக்கு மிக குறைந்த விலையில், உயரிய தரத்தில் பால் வினியோகம் செய்யப்படுகிறது. எனவே, தமிழகத்தில் ஆவின் பால் விற்பனைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. பொதுமக்களின் பால் தேவை அதிகரித்து வரும் நிலையில், அதற்கேற்ப ஆவின் நிறுவனம் தன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, சென்னை மாதவரம், தர்மபுரி, துாத்துக்குடி, கரூர் மாவட்டங்களில், புதிய பால் பண்ணைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. எனவே, அதிகரித்து வரும் பால் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும், எளிய முறையில், புதிதாக பால் மொத்த விற்பனையாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் வாயிலாக, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும், பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப பால் வினியோகம் எளிதாகவும், துரிதமாகவும் செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
எந்த ஒரு பால் நிறுவனமும் தற்போது தமிழகத்தில் தொடங்கப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.