Breaking News, State

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுதசுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

Photo of author

By Rupa

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுதசுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

Rupa

Button

பணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுத்சுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

பொதுமக்கள் தாங்கள் உழைத்து சம்பாதிக்கும் பணத்தில் சேமிப்பதை ஒரு அங்கமாக வைத்துள்ளனர். இவ்வாறு சேமிக்கும் பணத்தை வங்கியில் போடுவது வழக்கம். மேலும் மக்கள் தங்களின் தேவைக்காக வங்கியிலிருந்து கடன் பெறுவதும் வழக்கமே. மக்களுக்கு கடன் வழங்குவதில் பல தனியார் நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அந்த வரிசை பட்டியலில் அமுதசுரபி என்ற கடன் வழங்கும் கூட்டுறவு சங்கம் ஒன்று அனைத்து மாவட்டங்களிலும் இயங்கி வருகிறது. இந்த வங்கியில் அங்கு சுற்றியுள்ள மக்கள் படத்தை சேமித்து வருவது வழக்கம். தின சேமிப்பு சிறு சேமிப்பு என்று பல வகைகளில் சேமிப்பு கணக்கை திறந்து அதில் தங்கள் பணத்தை செலுத்தி வருகின்றனர்.

அவ்வாறு அமுதசுரபி என்ற தனியார் நிறுவனம் தற்பொழுது எந்த ஒரு அறிவிப்பும் இன்றி வங்கியை மூடியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் அமுதசுரபி என்ற தனியார் நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்த தனியார் கூட்டுறவு வங்கியில் அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராம மக்கள் பலர் சேமிப்பு கணக்கை திறந்து தங்களது பணத்தை செலுத்தி வந்துள்ளனர். அதுமட்டுமின்றி அந்த பகுதியில் சுற்றி இருக்கும் சிறு வியாபாரிகள் இல்லத்தரசிகள் என பலர் தின சேமிப்பு என்று பணத்தை செலுத்தி வந்துள்ளனர்.

இந்த தின சேமிப்பு ஸ்க் இமெயில் தினந்தோறும் வங்கியிலிருந்து பணியாளர்கள் நேரடியாக வாடிக்கையாளரிடம் சென்று பணத்தை வசூல் செய்வது வழக்கம். ஆனால் கடந்த சில நாட்களாக பணத்தை வசூல் செய்வதற்கு யாரும் வரவில்லை. சந்தேகமடைந்த மக்கள் அமுதசுரபி அலுவலகத்திற்கு நேரில் சென்று பார்த்துள்ளனர்.

அப்பொழுது அந்த வங்கி மூடப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களாக அமுதசுரபி நிறுவனம் மூடப்பட்டு இருப்பதாக அங்குள்ளவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த செய்தியை அறிந்த பணம் செலுத்திய மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தினசரி சேமிப்பு மற்றும் வைப்பு நிதி வைத்து சேமித்து வந்த மக்கள் அனைவரும் ஜெயகொண்டம் காவல் நிலையத்தில் இந்நிறுவனம் குறித்து புகார் அளித்துள்ளனர். புகாரை எடுத்துக் கொண்ட காவல்துறை மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றது.

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கிறார் தல தோனி! கதாநாயகி யார் தெரியுமா?

இந்தியா இலங்கைக்கு ராணுவ படைகளை அனுப்புகிறதா? விளக்கமளித்த வெளியுறவுத்துறை!

Leave a Comment