ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தமிழ் திரைத்துறையில் கால் பதிக்கிறார் தல தோனி! கதாநாயகி யார் தெரியுமா?

0
197

கடந்த 2004ஆம் வருடம் இந்திய கிரிக்கெட் அணியில் காலடி வைத்தவர் மகேந்திர சிங் தோனி. அவர் இந்திய கிரிக்கெட் அணிக்கு வந்த பிறகு பல்வேறு சாதனைகளை படைத்திருக்கிறார்.

அதோடு இவருக்கு உலகளவில் ரசிகர் பட்டாளம் ஏராளமாக இருக்கிறது. இவர் கிரிக்கெட்டில் மட்டுமல்லாமல் பைக் ரேஸராகவும் வலம் வருகிறார் என்றால் அது மிகையாகாது.

அதோடு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக அவர் பொறுப்பேற்றுக் கொண்ட அந்த நாள் முதல் இந்திய கிரிக்கெட் அணி ஒரு புதிய பரிமாணத்தை அடைந்தது என்றால் அது மிகையாகாது.

இந்திய கிரிக்கெட் அணியை பொறுத்தவரையில் அணைத்து விதமான கோப்புகளையும் வென்று கொடுத்த ஒரே கேப்டன் மகேந்திரசிங் தோனி தான் அதன் காரணமாகவே இவருக்கு ரசிகர் பட்டாளம் ஏராளம்.

40 வயதைக் கடந்திருந்தாலும் அவருடைய புத்தி கூர்மையும், பாடி பிட்னஸ் உள்ளிட்டவை இதுவரையில் குறையவில்லை. இந்த நிலையில், அவர் சமீபத்தில் டி20 கிரிக்கெட் போட்டி உட்பட அனைத்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீரென்று அறிவித்தார்.

இது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இருந்தாலும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பொருத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக அவரே தொடர்ந்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது தொடங்கியுள்ள ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் அவர் திடீரென்று கேப்டன் பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டு கேப்டன் பொறுப்புக்கு ஜடேஜா நியமிக்கப்பட்டார்.

விளைவு ஜடேஜா தலைமையில் சென்னை அணி ஒரு வெற்றியை கூட பெறவில்லை என்பது தான் வருத்தம். இந்த நிலையில், மீண்டும் அவர் தற்போது சென்னை அணியின் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி தமிழக ரசிகர்களாலும், அதோடு தமிழக மக்களாலும், கொண்டாடப்பட்டு வருகிறார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பிளே ஆப் வாய்ப்பை இழந்தாலும் கூட களத்தில் டோனி மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவர் தன்னுடைய கடைசி போட்டி சென்னையில் தான் நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இதன் காரணமாக, அவர் எதிர்வரும் ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? அல்லது இந்த சீசனுடன் ஓய்வு பெறுவாரா? என்ற பரபரப்பு எழுந்திருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தோனி மிக விரைவில் ஒரு தமிழ் திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் விதமாக இருக்கிறது.

அதற்காக ஒரு நிறுவனத்தை ஆரம்பித்து விட்டதாகவும், இந்த நிறுவனத்தின் மேலாளராக ரஜினிகாந்தின் முன்னாள் உதவியாளர் சஞ்சய் என்பவர் நியமனம் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் கிடைத்திருக்கிறது.

தோனியின் இந்த நிறுவனம் தயார் செய்யும் முதல் திரைப்படம் தமிழ் திரைப்படம் எனவும், இந்த திரைப்படத்தில் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதோடு இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாகவும், இந்த படம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Previous articleபுதுசு கண்ணா புதுசு! இனி ஷாப்பிங் செய்ய ஏடிஎம் கார்டு தேவையில்லை இது மட்டும் போதும்!
Next articleபணத்தை சுருட்டிக்கொண்டு ஓடிய அமுதசுரபி நிறுவனம்! வங்கியை முற்றுக்கையிட்ட பொதுமக்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here