11 வயது சிறுமிக்கு நடந்த கொடூரம் !! ஜார்கண்ட்டை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம்!!

Photo of author

By Sakthi

Jharkhand: ஜார்கண்ட் மாநிலத்தில் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமை எதிராக பல கடுமையான சட்டங்கள் நடைமுறையில் இருந்தாலும் அந்த குற்றங்கள் தினந்தோறும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இது போன்ற குற்றச் செய்திகளை ஊடகங்கள் வாயிலாக நமக்கு தெரிய வரும்போது இந்த நிலை எப்போது மாறும் என்ற கேள்விதான் ஏலத் தொடங்குகிறது.

இது போன்று ஜார்கண்ட் மாநிலத்தில் நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஜார்கண்ட் மாநிலம், பருச் மாவட்டம் தொழிற்சாலை அதிக அளவில் இயங்கி வரும் பகுதியில் 11 வயது சிறுமி தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். அச்சிறுமி வீட்டின் அருகே  விஜய் பஸ்வான் வயது 36 உடைய நபர் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று அந்த சிறுமி வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டு இருக்கும் போது வரும் சாக்லேட் வாங்கி தருவாதாக கூறி விஜய் பஸ்வான் அச் சிறுமியை அழைத்து இருக்கிறான். அதன் பிறகு ஆள் நடமாட்டம் இல்லாத புதர் பகுதிக்கு அச் சிறுமியை அழைத்து சென்று வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ய முற்பட்டு இருக்கிறான் அந்த கொடூரன். மேலும், அந்த சிறுமியின் பெண்ணுறுப்பில் இரும்பு கம்பியை கொண்டு தாக்கி இருக்கிறான்.

இதனால் பலத்த காயம் அடைந்த அந்த சிறுமி வலியால் கதறி அழுது இருக்கிறார். உடனே விஜய் பஸ்வான் அந்த இடத்தில் இருந்து தப்பி ஓடி இருக்கிறான். மகளின் கதறல் சத்தத்தை கேட்டு புதர் அருகே வந்து பார்த்த போது அந்த சிறுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள்.

மேலும், அந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்து  இருக்கிறார்கள். சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த விஜய் பஸ்வான் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து உள்ளார்கள்.