கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

0
100
#image_title

கார் ஓட்டும் பயிற்சி எடுத்த பொழுது ஏற்பட்ட விபரீதம்!!! ஆற்றினுள் கார் கவிழ்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக பலி!!!

கார் ஓட்ட விரும்பிய பெண் ஒருவர் கார் ஓட்டும் பயிற்சி எடுக்கும் பொழுது ஆற்றினுள் கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரினுள் சிக்கி ஆற்றில் மூழ்கி பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் கீழரத வீதியில் மகேஷ் குமார் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மனைவி சுபாங்கி அவர்கள் கார் ஓட்ட விரும்பினார். இதையடுத்து சுபாங்கி அவர்கள் தம்பி தாம்தேவ் அவர்களிடம் கார் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்து வந்தார்.

இதையடுத்து நேற்று(செப்டம்பர்11) வழக்கம் போல சுபாங்கி அவர்கள் தம்பி தாம்தேவ் அவர்களிடம் கார் ஓட்ட பயிற்சி எடுத்து வந்தார். இந்நிலையில் காரை சுபாங்கி அவர்கள் ஓட்டி வந்த நிலையில் தம்பி தாம்தேவ் அவர்கள் உடன் இருந்தார்.

இதையடுத்து தெற்கு பிச்சாவரம் சாலையில் வந்த பொழுது சுபாங்கி ஓட்டி வந்த கார் கட்டுப்பாட்டை இழந்தது. பின்னர் இந்த கார் அங்கு உள்ள வடிகால் ஆற்றில் தலைகுப்பற கவிழ்ந்தது. இதில் கார் ஆற்றுக்குல் மூழ்கியது. அதிர்ஷ்டவசமாக தம்பி தாம்தேவ் அவர்கள் காரின் கதவை உடைத்து காரில் இருந்து வெளியேறி கரைக்கு திரும்பி உயிர் தப்பினார்.

ஆனால் சுபாங்கி அவர்களால் வெளியேற வரமுடியாமல் காரில் சிக்கிக் கொண்டார். இதில் காருடன் ஆற்று நீரில் மூழ்கிய சுபாங்கி அவர்கள் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ஆற்றில் மூழ்கிய காரை மீட்டனர்.

உயிரிழந்த சுபாங்கி அவர்களின் சடலத்தை கைப்பற்றி அண்ணாமலைநகர் காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Previous articleஇஞ்சினியரிங் படித்தால் வாழ்கை சிறப்பாக இருக்கும்!!! சந்திரயான் 1 திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் பேட்டி!!!
Next articleகில், ரோஹித், விராட், கே.எல் ராகுல் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்!!! குல்தீப் யாதவின் சிறப்பான பந்துவீச்சு!!! இமாலய வெற்றி பெற்ற இந்தியா!!!