ரசிகர்கள் ஒன்றும் அணியின் உரிமையாளர்கள் இல்லை!! கொந்தளித்த எம் எஸ் தோனி !!

Photo of author

By Vijay

IPL: ஐ பி எல் அணிகளில் யார் தக்கவைக்க படுவார்கள் என்ற ரசிகர்கள் கறுத்து கணிப்பு குறித்து கொந்தளித்த எம் எஸ் தோனி.

நடக்கவிருக்கும் ஐ பி எல் மெகா ஏலம் மற்றும் தக்கவைப்பு வீரர்கள் குறித்து விவரங்கள் மற்றும் கணிப்புகள் குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரரான எம் எஸ் தோனி கருத்து தெரிவித்துள்ளார். ஐ பி எல் ஏலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாத ஒன்று.

ஐ பி எல் தொடரின் 2025 ம் ஆண்டுக்கான மெகா ஏலம் நவம்பர் மாத கடைசியில் நடைபெற உள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் எஅதிருக்கு முன்பு 6 வீரர்களை தக்கவைக்க முடியும் அதற்கான தக்கவைப்பு பட்டியலை நாளை வெளியிட வேண்டும் என பிசிசிஐ தெரிவித்துள்ளது.

இதனால் ஒவ்வொரு அணியிலும் எந்த வீரர் தக்க வைக்க படுவர் என்று கிரிக்கெட் முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் கணிப்புகளை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து எம் எஸ் தோனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிரிக்கெட் ரசிகனும் தன்னை அந்த அணியின் உரிமையாளர்கள் என நினைத்து கொள்கிறார்கள். அவ்வாறு நினைத்து எந்த அணியில் யார் இருப்பர் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர். ஐ பி எல் ஏலம் வித்தியாசமான முறையில் இயங்குவதாகவே நான் நினைக்கிறேன் என்றும் கூறினார். மேலும் சி எஸ் கே அணியில் தக்கவை படுவீர்கள் என்ற கேள்விக்கு வழக்கம் போல் பதிலளிக்கவில்லை.