படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

Photo of author

By Divya

படுத்த படுக்கையாக இருப்பவரையும் எழுந்து ஓட வைக்கும் அற்புத வீட்டுக்குறிப்பு!!

Divya

உடல் வலிமையை அதிகரிக்க நினைப்பவர்கள் கோதுமையை அரைத்து தேன் கலந்து சாப்பிடலாம்.கோதுமையில் கால்சியம்,பொட்டாசியம்,மெக்னீசியம்,புரதம்,நார்ச்சத்து,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த கோதுமையை அரைத்து பவுடராக சாப்பிட்டு வந்தால் உடல் எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.முளைகட்டிய கோதுமையை பொடித்து பாலில் கலந்து குடித்தால் எலும்புகள் இரும்பு போன்று வலிமை பெறும்.

இரத்தத்தில் உள்ள நச்சுக் கழிவுகள் வெளியேற முழு கோதுமை பொடியில் கஞ்சி செய்து குடிக்கலாம்.உடல் தெம்பு பெற,நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க முழு கோதுமை உணவு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்:-

1)கோதுமை – 50 கிராம்
2)தூயத் தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

முதலில் 50 கிராம் முழு கோதுமையை எடுத்துக் கொள்ளுங்கள்.இந்த கோதுமையை பாத்திரத்தில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி அலசி சுத்தம் செய்யுங்கள்.

கோதுமையில் உள்ள தூசி,அழுக்கு நீங்கும் வரை தண்ணீர் ஊற்றி அலச வேண்டும்.பின்னர் தண்ணீரை வடித்துவிட்டு வெயிலில் ஒரு காட்டன் துணி போட்டு கோதுமையை கொட்டி நாள் முழுவதும் காயவிட வேண்டும்.

பிறகு அடுப்பில் வாணலி வைத்து கோதுமையை போட்டு குறைவான தீயில் பொன்னிறமாக வறுக்க வேண்டும்.கோதுமை கருகிவிட கூடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இந்த கோதுமையை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு நைஸ் பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இதை ஜல்லடை கொண்டு சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த கோதுமை மாவை டப்பாவில் கொட்டி சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு கிண்ணத்தை எடுத்து 20 கிராம் அளவிற்கு அரைத்த கோதுமை மாவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து குழைத்துக் கொள்ள வேண்டும்.இதை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலுக்கு தேவையான வலிமை கிடைக்கும்.இந்த கோதுமை பேஸ்ட்டை சாப்பிட்டு வந்தால் கால் வலிமை அதிகரிக்கும்.

ரெடிமேட் கோதுமை மாவு பயன்படுத்தாமல் முழு கோதுமையை வறுத்து அரைத்து பயன்படுத்தினால் மட்டுமே முழுமையான தீர்வு கிடைக்கும்.