இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளது. இதில் இரு அணிகளும் ஒரு ஒரு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மூன்றாவது போட்டி சமனில் முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் 4 வது போட்டிக்கான எதிர்பார்ப்பு உச்சம் தாண்டியுள்ளது. இந்த 4 வது போட்டியானது மெல்போர்ன் மைதானத்தில் நாளை தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்திய அணி பயிற்சி மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே பயிற்சியின் போது ரசிகர்கள் அனுமதித்த போது அவர்கள் வீரர்களின் பெயர்களை கூறி கேலி கிண்டல் செய்தனர்.
மேலும் இந்த முறை ரசிகை ஒருவர் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் பயிற்சி செய்யும் போது அருகில் சென்று ரோஹித் ரோஹித் என்று கத்தியுள்ளார். அவரும் தன்னுடைய தீவிர ரசிகை அருகில் சென்று பேசியுள்ளார். ஆனால் அந்த ரசிகை கில் ஐ அழைக்க முடியுமா என்று கேட்டுள்ளார். கோபத்தில் அவர் நான் எங்கு சென்று அவரை அழைக்க என்று கூறிவிட்டு சென்றுள்ளார். இது தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.