பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்!

Photo of author

By Parthipan K

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்!

Parthipan K

An announcement made by the railway administration for the convenience of passengers! Time change in metro!

பயணிகளின் வசதிக்கேற்ப ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பு! மெட்ரோ நேரத்தில் மாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .அந்த அறிவிப்பில் மெட்ரோ ரயில்கள் தற்போது வரை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இயக்கப்படுகின்றது. இந்நிலையில் வண்ணாரப்பேட்டை மற்றும் ஆலந்தூர் இடையே மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும்.

அந்த வகையில் காலை 8 மணி முதல் 11 மணி வரையிலும்  மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும் இந்த மூன்று நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் அதன் பிறகு உள்ள நேரங்களில் வழக்கம்போல் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விம்கோ நகர்-விமான நிலையம் இடையே 6 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.அதனை தொடர்ந்து சென்னை சென்ட்ரல்- பரங்கிமலை, சென்னை சென்ட்ரல் -விமான நிலையத்திற்கு இடையே 12 நிமிடங்களுக்கு ஒரு முறை மெட்ரோ ரயில் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

காலை நேரத்தில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ இயக்கப்படுவதால் பணிக்கு செல்வோர்க்கு மிகவும் பயன் அளிக்கும் விதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.