சிறந்த  ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விருது!! அறிவியல் நகரம் வெளியிட்ட அறிவிப்பு!! 

0
29
An award to recognize the best teachers!! Announcement published by Science City!!
An award to recognize the best teachers!! Announcement published by Science City!!

சிறந்த  ஆசிரியர்களை அங்கீகரிக்கும் விருது!! அறிவியல் நகரம் வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழக அரசு மாணவர்களுக்கு மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மேலும் தமிழகத்தில் அறிவியல் சார்ந்த அறிவுகளை மேம்படுத்தும் வகையில் சென்னையில் உயர்கல்வி துறை சார்பாக அறிவியல் நகரம் தொடங்கப்பட்டது. இந்த நகரம் பொதுமக்களுக்கும், பள்ளி மாணவர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சியில் மூத்த அறிவியல் அறிஞர்கள் மற்றும் தமிழ்நாடு விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள். அதனையடுத்து மூத்த அறிஞர்களை பாராட்டி அவர்களுக்கு விஞ்ஞானிகள் விருது வழங்கப்படுகிறது.  மேலும் தமிழ்நாடு இளைய விஞ்ஞானிகள் விருதும் வழங்கப்படுகிறது.

மேலும்  அறிவியல் நகரத்தின் துணைத்தலைவர் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில் கிராமப்புற கண்டுபிடிப்பாளர் விருது மற்றும் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை அங்கீகரித்து விருதுகள்  வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.

மேலும் இந்த விருதுகள் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் சிறந்த அறிவியில் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது பெறுவதற்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை ஆசிரியர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளளது.

இதற்காக இந்த கல்வி ஆண்டில் 5 துறைகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படும் என்று தெரிவித்துள்ளது. அதன் படி கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் , புவியியல் மற்றும் வேளாண் நடைமுறைகள். இதற்கு www. Sciencecitychennai.in என்ற இணையதள பக்கத்தை பயன்படுத்தி விண்ணபிக்கலாம். இதற்கு 14.09.2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கம வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

author avatar
Jeevitha