ஆஸ்திரேலியா அணி தற்போது இந்திய அணி உடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நடைபெற்று முடிந்த முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இதில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 104 ரன்களில் சுருண்டது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்களை ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சாளர்கள் எந்த விதத்திலும் தடுக்க முடியவில்லை.இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி 478 ரன்களுக்கு டிக்ளேர் செய்தது.
மேலும் மூன்றாவது நாள் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜோஷ் ஹேசில்வுட் அளித்த பேட்டியில் அவர் நாங்கள் எங்கள் பணியை செய்து முடித்து விட்டோம். இனி ஆட்டத்தை பேட்ஸ்மேன்கள் கையில் தான் உள்ளது என கூறியுள்ளார். இதன் மூலம் இவர் இந்த ஒரு அணியை பேட்ஸ்மேன்கள் மற்றும் பவுலர்கள் என இரு குழுக்களாக பிரித்து பேசியதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இதனால் ஆஸ்திரேலியா அணியில் பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் என்ற பிரிவில் இருந்து வருகிறதா? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது போட்டியில் காயம் காரணமாக ஜோஷ் ஹேசில்வுட் கலந்து கொள்ள மாட்டார் என கூறப்படுகிறது.