பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

பட்டதாரி இளைஞர் மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை:! இதன் பின்னணி என்ன? தீவிர விசாரணையில் காவல்துறையினர்!

சென்னை தண்டையார்பேட்டை ஆர்டிஓ அலுவலகம் அருகே அன்பு என்பவர் வசித்து வருகிறார்.மிக்சர் வியாபாரியான இவருக்கு சுதர்சன் என்னும் மகன் உள்ளார்.மெக்கானிக்கல் பட்டதாரியான
இவர்,அம்பத்தூர் ஓரகடம் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் டிசைனிங் இன்ஜினியராக கடந்த 3 வருடமாக பணிபுரிந்து வருகிறார்.சுதர்சன் கடந்த சில நாட்களாக வீட்டில் இருந்தபடியே பணிபுரிந்து வந்த நிலையில்,கடந்த மூன்று நாட்களுக்குப் முன், சலூன் கடைக்கு சென்று வந்த பிறகு செல்போனை வைத்துவிட்டு வீட்டிலிருந்து சென்றிருக்கிறார்.

வெகு நேரமாகியும் சுதர்சன் வீட்டிற்கு திரும்பாத காரணத்தினால் அவருடைய பெற்றோர்கள் அக்கம்,பக்கம் வீடுகள் மற்றும் நண்பர்கள் வீடுகள்,உறவினர் வீடுகள் என அனைத்து இடங்களிலும் தேடியுள்ளனர்.எங்க தேடியும் கிடைக்காததால் வீடு திரும்பிய பெற்றோர்கள் வீட்டின் முன்பு சுதர்சனின் காலணிகள் இருந்ததை கண்டு,மொட்டை மாடியில் தேடிப் பார்க்க சென்றனர்.அதன் பிறகு வீட்டின் பின்புறம் சுதர்சன் மாடியில் இருந்து குதித்து ரத்த வெள்ளத்தில் கீழேகிடந்ததை பார்த்த பெற்றோர்கள் பதறிப் போய் சுதர்சனியின் உடலை மீட்டு அருகிலுள்ள ஸ்டாலின் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.சுதர்சனியின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இச்சம்பவம் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வண்ணார்பேட்டை காவல் துறையினர் சுதர்சனியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் அவரது தற்கொலைக்கான காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Comment