பிறந்த குழந்தைக்கு ஏற்படும் பிரச்சனையை தீர்க்கும் மூலிகை!

0
208

இந்த மூலிகையின் பெயர் உப்பிலாங்கொடி. இந்த மூலிகை கொடி வகையை சார்ந்த மூலிகைஇதுவும் பிற செடி, மரங்கள், வேலிகளை சார்ந்து வளரும் பண்பயைக்கொண்டது.

பழங்காலத்தில் குழந்தைகள் பால் குடித்து அதே பால் வாக்கில் மலம் கழித்தால்
அதை பால் கட்டு பேதி என்பார்கள்.
இந்த பிரச்சயை போக்கும் ஒரு அற்புத மருந்து இந்த மூலிகை.
இதை இந்த மூலிகையை ஆமணக்கு எண்ணையில் எரித்து பாலாடை கணக்கில்( பாலாடை என்பது ஒரு சடங்கு 30 மில்லிலிட்டர் வரும்). உள் மருந்தாக குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

குழந்தைகளின் மாதங்களை கணக்கிட்டு முக்கால், அரை, கால் சங்கு, அல்லது பாலாடை என்ற கணக்கில் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுப்பார்கள்.
ஒன்று அல்லது இரண்டு வேளை கொடுக்க பால் கழிய்ச்சல் குணமாக்கும்.

இது இப்பொழுதும் நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும் இதனை பயன்படுத்தி குழந்தையின் நலனை பேணி பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

இந்த அறிய அற்புத மூலிகைகளை கால ஓட்டத்தில் மறந்து ஆங்கில மருத்துவம் தேடி
பல அந்நிய நோய்களை சம்பாதிக்கும் நம் எப்போது திருந்தப் போகிறோம்.

கிராமத்தில் சிறுபிள்ளைகள் ஈரூள்ளி தழை என்பார்கள். தலையில் வைத்து இந்த இலையை நசுக்கினால் பேன் முட்டைகள் உடைவதை போலவே சப்தம் வரும். அதான் இதற்கு ஈருள்ளி தழை என்று கிராமத்து சிறுவர்களின் வட்டாரசொல்லாக காணப்படுகிறது.

Previous articleவெள்ளைப்படுதல் பிரச்சனைக்கு தீர்வு!
Next articleஇந்த மூலிகை சர்க்கரை நோயாளிக்கு ஒரு வரபிரசாதம்!