உங்கள் உடலில் படிந்திருக்கும் கெட்ட கொழுப்பை கரைக்க இந்த தீர்வுகள் நிச்சயம் உதவும்.
தீர்வு 01:
இலவங்கப்பட்டை
பாத்திரத்தில் ஒரு துண்டு இலவங்கப்பட்டை போட்டு வாசனை வரும் வரை வறுக்க வேண்டும்.பின்னர் இதை மிக்சர் ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ள வேண்டும்.அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் வைத்து ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.
அடுத்து அரைத்து வைத்துள்ள இலவங்கப்பட்டை தூளை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.இந்த பானத்தை தினமும் குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.
தீர்வு 02:
பூண்டு பல்
ஒரு பல் பூண்டை தோல் நீக்கிய பிறகு லேசாக இடித்து பாத்திரத்தில் போட்டுக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த பூண்டு பானத்தை குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு குவியாமல் இருக்கும்.
தீர்வு 03:
நெல்லிக்காய்
தினமும் இரண்டு பெரிய நெல்லிக்காயை இடித்து ஜூஸாக குடித்து வந்தால் உடலில் இருக்கின்ற கெட்ட கொழுப்பு கரையும்.
தீர்வு 04:
வெந்தயம்
ஒரு பாத்திரத்தில் 100 மில்லி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.
இந்த வெந்தய பானத்தை குடித்து வந்தால் உடலில் கெட்ட கொழுப்பு படியாமல் இருக்கும்.
தீர்வு 05:
ஆளிவிதை
கிளாஸில் தண்ணீர் ஊற்றி அரை தேக்கரண்டி ஆளிவிதை போட்டு இரவு முழுவதும் ஊறவைக்க வேண்டும்.மறுநாள் காலை நேரத்தில் இந்த ஆளிவிதை பானத்தை குடித்தால் உடலில் எல்டிஎல் கொழுப்பு சேராமல் இருக்கும்.