மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!! ஆதார் கார்டு இனி யூஸ் ஆகாது.. வெளியான முக்கிய தகவல்!!
ஆதார் கார்டு என்பது ஒவ்வொரு இந்தியரின் அடையாளம் ஆகும். இந்த ஆதார் அரசு நலத் திட்டங்களை எளிதில் பெறுவதற்கு, வங்கி கணக்கு திறக்க, அரசு நலத் திட்டத்திற்கு விண்ணப்பம் செய்வதற்கு, ரேஷன் கார்டு இணைப்பு, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு என்று அனைத்து இடங்களிலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக இருக்கிறது.
இந்த ஆதார் 12 இலக்க தனித்துவ அடையாள எண்ணைக் கொண்டிருக்கிறது. இதில் புகைப்படம், பெயர், முகவரி, பிறந்த தேதி உள்ளிட்டவைகளுடன் குடிமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வங்கி பரிவர்த்தனை முதல் ஷாப்பிங் மால் வரை அனைத்து இடங்களிலும் ஆதார் கார்டு பயன்பாடு அதிகரித்து விட்டது.
இப்படி நாளுக்கு நாள் ஆதார் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் தற்பொழுது இது குறித்த புதிய தகவல் ஒன்றை யுஐடிஏஐ வெளியிட்டு இருக்கிறது. அது என்னவென்றால் இனி பிறந்த தேதிக்கு அடையாள சான்றாக ஆதாரை பயன்படுத்த முடியாது என்பது தான்.
நமது ஆதாரில் பிறந்த தேதி பதிவிடப்பட்டு இருக்கிறது. இதை நம்மில் பெரும்பாலானோர் பிறந்த தேதிக்கு சான்றாக கேட்கும் இடங்களில் ஜெராக்ஸ் எடுத்து சமர்ப்பித்து வருகிறோம்.
ஆனால் இனி பிறந்த தேதிக்கு சான்றாக ஆதாரை உபயோகிக்க முடியாது என்பது குறித்த புதிய விதியை வருகின்ற வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு கொண்டுவர யுஐடிஏஐ முடிவு செய்துள்ளது. இனி வரும் ஆதார் கார்டுகளில் பிறந்த தேதி பதிவிடாமல் வழங்கவும் முடிவு செய்துள்ளது.
ஆதார் ஒரு அடையாள அட்டை மட்டுமே. பிறந்த தேதிக்கு சான்றாக பிறப்பு சான்றிதழ், கல்வி சான்றிதழை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து இருக்கிறது. ஆதார் முக்கியமான ஒன்று. இதை அனைத்து இடங்களிலும் மக்கள் வழங்க கூடாது என்பதற்காக தான் யுஐடிஏஐ இவ்வாறு சில மாற்றங்களை கொண்டு வருவதாக சொல்லப்படுகிறது.