இந்திய அணி தற்போது விளையாடி வரும் ஆஸ்திரேலியா உடனான டெஸ்ட் போட்டியில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் கடந்த போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாடி வருகிறார்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் நடைபெறும் 5 போட்டிகளை இந்திய அணி 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற முடியும். இந்நிலையில் நடந்து முடிந்த 3 போட்டிகளில் இரு அணிகளும் தலா 1 போட்டிகளில் வென்று ஒரு போட்டி சமன் செய்துள்ளது.
இந்நிலையில் கடந்த இரு தொடர்களில் அதிரடியாக விளையாடி அணிக்கு ரன் சேர்த்த இந்திய வீரர் ரிஷப் பண்ட் இந்த தொடரில் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இதுகுறித்து பேசிய சுனில் கவாஸ்கர் முதலில் களமிறங்கி 1 மணி நேரம் ஆடுகளத்திற்கு மரியாதை கொடுக்க வேண்டும் பிறகு உங்கள் அதிரடியை காட்டுங்கள் என்று அவருக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 வது போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.