குடும்ப வன்முறை புகாரை விசாரிக்க வந்த பெண் அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது நாயை விட்டு கடிக்க வைத்த சம்பவம்!

Photo of author

By Savitha

குடும்ப வன்முறை புகாரை விசாரிக்காக வந்த பெண் அதிகாரி மற்றும் கவுன்சிலர் மீது நாயை விட்டு கடிக்க வைத்த சம்பவம்: இருவரும் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை.

கேரளா மாநிலம் வயநாட்டிலுள்ள திருக்கைப்பேட்டையில் ஒரு பெண் தன்னை குடும்பத்தினர் கொடுமை படுத்துவதாக புகார் தெரிவித்துள்ளார்.இதனை விசாரிப்பதற்காக மாவட்ட அதிகாரி மாயா எஸ் பணிக்கர் மற்றும் கவுன்சிலர் நஜியா ஷெரின் இருவரும் அந்த பெண்ணை விசாரிப்பதற்காக போன் செய்தும் எடுக்காததால் இது பற்றி விசாரணை செய்வதற்காக வீடிற்கு வந்துள்ளனர்.

அப்பொழுது அந்த பெண்ணின் கணவர் ஜோஸ் கோபமடைந்து அவர் வளர்க்கும் நாயை அவிழ்த்து விட்டுள்ளார். அப்பொழுது மாவட்ட அதிகாரி மாயாவை நாய் கடித்துள்ளது. அப்பொழுது கவுன்சிலர் நஜியா ஷெரின் பயந்து ஓடும் போது கீழே விழுந்ததில் காயமடைந்தார்.இருவரையும் அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டனர். உடனடியாக கல்பெட்டா பொது மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றனர்.

ஜோஸ் என்பவர் மீது அதிகாரிகள் மேப்பாடி போலீசில் புகார் அளித்துள்ளனர். குடும்ப வன்முறை புகாரை விசாரிக்க வந்த பெண் பாதுகாப்பு அதிகாரியை நாயை விட்டு கடிக்க வைத்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.