9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!

0
126
#image_title
9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் கருணாநிதி குறித்த பாடம்!
தமிழகத்தின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால், அதில் மிக சிலரே இன்றளவும் மக்களின் நினைவலைகளில் வருவர். அப்படி ஒரு அரசியல் தலைவர் தான் கருணாநிதி. அவரது ஆரம்ப கட்ட கால அரசியல் நுழைவு என்பது சாதாரணமாக அமையவில்லை, இவரது எழுத்து திறமையும், பேச்சு திறமையும் தான் இவரை அரசியலின் உச்சானி கொம்பிற்கே கொண்டு சென்றது என்றால் அது மிகையாகாது.
தன்னுடைய அசாத்திய பேச்சு திறமையால் மற்ற அரசியல் கட்சியினரை தினறடிக்க வைத்தவர் கருணாநிதி. இவரின் திறமைக்கு பரிசாக அறிஞர் அண்ணா திமுகவில் பல உயரிய பதவிகளை அளித்தார். அண்ணா மறைவிற்கு பின்னர் தன்னுடைய சாதுர்ய திறமையால் முதல்வர் பதவியை அடைந்த அவரது அரசியல் பயணம் மின்னல் வேகத்தில் சென்றது.
கருணாநிதி தமிழக முதல்வராக இருந்த சமயங்களில் நாடு போற்றும் பல நல்ல திட்டங்களை அறிவித்து மக்களிடையே நன்மதிப்பை பெற்று வந்தார். இவரது ஆட்சி காலத்தில் குறிப்பாக மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களையும், அவர்கள் எவ்வாறு தங்களை கல்வியிலும், பொது வாழ்விலும் மேம்படுத்தி கொள்வது என பல அறிவுரைகளையும், எடுத்து காட்டுகளையும் கூறிவந்தார்.
இந்த நிலையில் தற்போது நடைபெற்று வரும் திமுக ஆட்சியில் பள்ளி கல்வி துறை அமைச்சராக உள்ள அன்பில் மகேஷ் பொய்யா மொழி சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது, முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்த பதிவுகள், தமிழ்நாட்டிற்கு அவர் ஆற்றிய தொண்டுகள், சேவைகள் பற்றி மாணவர்கள் அறியும் வண்ணம் 9-ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம் பெறும் என்று கூறினார்.
இதற்கான பாடப்பகுதிகள் இறுதி செய்யும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும், பாட புத்தகங்களில் அச்சிடும் பணிகள்  தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் விரைவில் பாடப்புத்தகம் வெளிவரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனேகமாக கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.