மனைவி, மகன் இருவரையும் கொன்று தற்கொலை செய்த இந்தியர்… அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்…
அமெரிக்காவில் வசிக்கும் இந்திய நாட்டை சேர்ந்த ஒருவர் தனது மனைவி மற்றும் கன் இருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மேரிலேண்ட் மாநிலத்தில் பால்டிமோர் என்ற பகுதியில் இந்தியாவை சேர்ந்த யோகேஷ் என்பவர் வசித்து வந்தார். இவர் இந்தியாவில் கர்நாடாக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தை சேர்ந்தவர். யேகேஷ் அமெரிக்காவில் மனைவி பிரதீபா அவர்களுடன் வசித்து வந்தார்.
யோகேஷ் மற்றும் பிரதீபா இருவருக்கும் 6 வயதில் யாஷ் என்ற மகன் உள்ளார். கணவன் யோகேஷ் மற்றும் மனைவி பியதீபா இருவரும் பொறியாளர்களாக வேலை செய்து வருகின்றனர். இருவரும் 9 ஆண்டுகளாக அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் வசித்து வந்தனர்.
யோகேஷ் அவர்களின் தந்தை பல வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இதனால் யோகேஷ் அவர்களின் தாய் கர்நாடக மாநிலம் தாவண்கரே மாவட்டத்தில் வசித்து வருகிறார்.
அமெரிக்கா நாட்டில் எப்பொழுதும் வழக்கமாக நடக்கும் ரோந்து ஆய்வுக்கு காவல் துறையினர் கடந்த ஆகஸ்ட்19ம் தேதி யோகுஷ் வீட்டுக்கு சென்றனர். அப்பொழுது வீட்டில் ரோந்து ஆய்வுக்கு சென்ற காவல் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அதாவது காவல் துறையினர் ரோந்து ஆய்வுக்கு சென்ற பொழுது யோகேஷ், பிரதீபா, மகன் யாஷ் மூவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. மூவரின் உடல்களிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்து. பின்னர் மூவரின் உடல்களூ மீட்டு காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
முதல்கட்ட விசாரணையின் முடிவில் யேகேஷ் தனது மனைவி பிரதீபாவை சுட்டுக் கொலை செய்துவிட்டு பின்னர் தனது மகனை கொலை செய்தார். இறுதியில் யேகேஷ் அவர்கள் தற்கொலை செய்து கொண்டார் என்று தகவல்கள் வெளியானது.
இதுகுறித்து யோகேஷ் அவர்களின் தாயாருக்கும் உறவினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். யோகேஷ், பிரதீபா, யாஷ் மூவரின் உடல்களையும் இந்தியா கொண்டு வர முடிந்த உதவிகளை செய்வோம் என்று பால்டிமோர் காவல் துறையினர் கூறியுள்ளனர்.
யோகேஷ், பிரதீபா, யாஷ் மூவரும் இறந்ததை இரண்டு கொலைகள் மற்றும் தற்கொலை வழக்காக மாற்றி தீவரமாக விசாரித்து வருகின்றனர். யோகேஷ் ஏன் இப்படிப்பட்ட முடிவுக்கு ஆளானார் என்பது பற்றி இன்னும் எதுவும் அறிவிக்கப்படவில்லை.