பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!!

Photo of author

By Amutha

பாகிஸ்தான்பெண் இந்தியா வந்தது போல் லாகூர் சென்ற இந்தியபெண்!! காதலுக்காக  நாடுகடக்கும் பெண்கள் வெளியான அதிர்ச்சி தகவல்!! 

காதலனுக்காக பாகிஸ்தான் பெண் இந்தியா வந்தது போல தற்போது இந்தியப்பெண் ஒருவர் பாகிஸ்தான் சென்று உள்ளார்.

பாகிஸ்தானை சேர்ந்த சீமா ஹைதர் என்ற பெண் தனது பப்ஜி விளையாட்டில் அறிமுகமான காதலனுக்காக தனது 4 குழந்தைகளுடன் இந்தியா வந்து  உத்திரபிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்த சச்சின் என்பவரை திருமணம் செய்து இந்துவாக மாறி வாழ்ந்து வந்துள்ளர். இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.

அவர் பாகிஸ்தான் செல்வதில்லை எனவும் இந்து மதத்தினை ஏற்று கொண்டதாகவும் கூறிய நிலையில் சிலர் சீமாவை பாகிஸ்தான் உளவாளியாக என கூறி தண்டிக்க கூறியும், சிலர் அவர்கள் காதலுக்கு ஆதரவும் தெரிவித்தும் உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

தற்போது அதைப்போலவே இந்திய மாநிலம் ராஜஸ்தானை சேர்ந்த பெண் காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்று உள்ளார். ராஜஸ்தான் மாநிலம்  அல்வார் மாவட்டத்தை சேர்ந்த அஞ்சு என்ற இந்தியப் பெண், தனது பேஸ்புக் காதலரான நஸ்ருல்லாவை சந்திப்பதற்காக பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்க்வாவுக்குச் சென்றுள்ளார்.

உத்தர பிரதேசத்தின் பல்லியா மாவட்டத்தில் உள்ள கர்புரா கிராமத்தை சேர்ந்தவரான அரவிந்தன்  கடந்த 2005 ஆண்டு முதல் ராஜஸ்தானில் பணிபுரிந்து வருகிறார். மேலும் கடந்த 2007 ஆம் ஆண்டு அஞ்சு என்பவரை திருமணம் செய்து தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் ராஜஸ்தான் அல்வாரில் பிவாடி பகுதியில் வசித்து வருகிறார். அஞ்சுவும் பிவாடி தப்புகடாவில் ஒரு நிறுவனத்தில் பணி புரிந்து வருகிறார்.

இந்த நிலையில் அஞ்சுக்கு நஸ்ருல்லாவுடன் பேஸ்புக் மூலம்  பழக்கம் ஏற்பட்டு உள்ளது. அவரை வெறித்தனமாக காதலித்து வந்துள்ளார். இந்தநிலையில் தான் அஞ்சு  தனது இரண்டு குழந்தைகளையும், கணவரையும் விட்டுவிட்டு பாகிஸ்தானின்  லாகூர் சென்று உள்ளார். அவர் குழந்தைகளுடன் வீடியோ காலில் பேசும்போது தோழியை பார்க்க வந்துள்ளதாக தெரிவித்து உள்ளார்.

மேலும் அஞ்சு பாகிஸ்தான் செல்ல புது சிம் கார்டு வாங்கியுள்ளதாகவும் அந்த நம்பரை கூட கணவருக்கு கொடுக்காமல் சென்றது பெரிய விஷயம். இதனைத் தொடர்ந்து உள்ளூர் போலீசார் மற்றும் உளவுத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.